அன்றாட வாழ்வில் அறிவியல்!
Print

அறிவியல்!

அன்றாட வாழ்வில் அறிவியல்!

வெங்காயம் வெட்டும்போது கண்களில் நீர் வருவது ஏன்?

ஒவ்வொரு கண்ணிற்குள்ளும் ஒரு கண்ணீர்ச் சுரப்பி(லேக்ரிமல் சுரப்பி) உள்ளது. நாம் நம் கண்களைச் சிமிட்டும் ஒவ்வெரு முறையும் கண்ணீர்ச் சுரப்பிகளிலிருந்து சிறிதளவு நீர் உருவாகும். அது நம் கண்களைச் சுத்தம் செய்யப் பயன்படும்.

புகை போன்ற எரிச்சலூட்டும் பொருள்கள் நம் கண்களை அடையும்போது, நம் கண்கள் எரியும். எனவே அந்த எரிச்சலூட்டும் பொருளைக் கண்களிலிருந்து வெளியேற்ற நம் கண்கள் வேகமாகச் சிமிட்டும். அதனால் அதிகமான கண்ணீர் உற்பத்தியாகி, அப்பொருளை வெளியேற்றிவிடும்.

நாம் வெங்காயத்தை வெட்டும்போது, அதிலிருக்கும் ஒரு கந்தகக் கலவை (Propanethiol S-oxide) ஆவியாகி நம் கண்களையும், அருகிலிருப்பவர்களின் கண்களையும் அடையும். அந்த வாயு கண்களில் உள்ள நீரோடு கலந்து, கந்தக அமிலமாக (Sulphuric Acid)  மாறும்.

அந்த அமிலம் நம் கண்களை எரிச்சலடையச் செய்யும். நாம் மேலே பார்த்ததுபோல் எரிச்சலையூட்டும் பொருள் கண்களில் இருப்பதால்,   நாம் கண்களை வேகமாகச் சிமிட்டத் தொடங்குவோம். கண்ணீர் அதிகமாக உற்பத்தியாகும். அந்த அமிலம் வெளியேறும்வரை கண்ணீர் வரும்.

இதுதான் வெங்காயம் வெட்டும்போது நாம் அழுவதற்குப்பின் உள்ள அறிவியல்!!

Share