ஒற்றுமையின் பலம்
Print

ஒற்றுமையின் பலம்

பிஞ்சுகளே,

சிங்கம் என்றாலே நமக்குச் சொல்லப் பட்டிருப்பது அதன் கம்பீரமான நடையும், வீரமும், காட்டுக்கே ராஜா என்பதும்தானே. அப்படிப்பட்ட சிங்கத்தையே தமது ஒற்றுமையால் ஓட ஓட விரட்டியுள்ளது காட்டெருமைகள் கூட்டம்.

எருது, சிங்கம் கதையினைக் கேட்டிருப்பீர்கள் - படித்தும் இருப்பீர்கள். அந்தக் கதையில் ஒற்றுமையாக இருந்தவரை எருதுகளை சிங்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது. தனித் தனியாகப் பிரித்துவிட்டு, ஒவ்வொரு எருதாக வேட்டையாடி சிங்கம் சாப்பிட்டுவிடும் என்பது கதை மட்டுமல்ல, நிஜத்திலும் நடந்திருக்கிறது.

இது நடந்தது நம் நாட்டில் அல்ல, கென்யாவில். கென்யா நாட்டின் காட்டுப் பகுதியில் வசித்துவரும் சிங்கம் ஒன்று, காட்டெருமைக் கூட்டத்தைப் பார்த்ததும் ஓர் எருமை மாட்டிற்குக் குறிவைத்துத் தாக்க முயற்சி செய்துள்ளது.

உடனே எச்சரிக்கை அடைந்த காட்டெருமைகள் சிங்கத்தைத் துரத்த ஆரம்பித்துள்ளன. உயிர் பயம் என்பது எல்லோருக்கும் உண்டுதானே, பயந்து போன சிங்கம் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் பிடித்துள்ளது. பசி, ஏமாற்றம், உயிர்பயம் நிறைந்த சிங்கத்தின் ஓட்டத்தையும் _ உணர்ச்சியையும் காணொளியில் (வீடியோ) காணுங்கள்.

ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து உங்கள் நண்பர்களிடம், உடன் பிறந்தவர்களிடம், உறவினர்களிடம் பழகுங்கள்.

Share