உலக நாடுகள்- கோகோஸ் தீவுகள்
Print

உலக நாடுகள்

கோகோஸ் தீவுகள் COCOS (KEELING) ISLANDS

தலைநகரம்: மேற்குத் தீவு (West Island)

பரப்பளவு: 14 சதுர மைல்

மக்கள்தொகை: 600

அலுவலக மொழி: ஆங்கிலம்

அரசி: இரண்டாம் எலிசபெத்

ஆளுநர்: சர் பீட்டர் கோஸ்க்ரோவ் (Sir Peter Cosgrove)

நிருவாகி: பாரி ஹாஸ் (Barry Haase)

நாணயம்: ஆஸ்திரேலியன் டாலர்

 

அமைவிடம்: ஆஸ்திரேலியாவின் நேரடி ஆளுமைக்குட்பட்ட யூனியன் பிரதேசமாகும். இந்தியப் பெருங்கடலில் கிறிஸ்துமஸ் தீவிற்குத் தென்மேற்கிலும், ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் நடுவிலும் அமைந்துள்ளது.

சிறப்புச் செய்திகள்: 1609ஆம் ஆண்டு கேப்டன் வில்லியம் கீலிங் என்னும் அய்ரோப்பியரால் இந்தத் தீவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வில்லியம் ஹீலிங் அப்போது கிழக்கிந்தியக் கம்பெனியில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோகோஸ் தீவு, ஹீலிங் தீவு எனவும் அழைக்கப்படுகிறது.

தென்கிழக்குப் பருவக்காற்று ஓர் ஆண்டில் 9 மாதங்கள் வீசுவதால் சிறப்பான தட்பவெப்பநிலை நிலவுகிறது.

1914, நவம்பர் 9 அன்று முதல் உலகப் போரில் ஜெர்மனின் எம்டன் கப்பல் இத்தீவைக் கைப்பற்றி தகவல் தொடர்பு நிலையத்தை அமைத்தது. இது போர்க் கப்பல்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரிலும் இந்த கோகோஸ் தகவல் தொடர்பு நிலையம் பேருதவியாக இருந்தது.

1955ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று கோகோஸ் தீவு ஆஸ்திரேலியச் சட்டம் 1955இன்படி ஆஸ்திரேலியாவின் கட்டுப் பாட்டிற்குள் வந்தது.

Share