செவ்வாய் கிரகத்தில் கடல்
Print

செவ்வாய் கிரகத்தில் கடல்

செவ்வாய் கிரகத்தில் பூமியில் உள்ள ஆர்க்டிக் பெருங்கடலைவிட பெரிய கடல் இருந்துள்ளது என நாசாவின் கோடார்ட் விண்வெளி உயிரியல் மய்யத்தைச் சார்ந்த தலைமை ஆராய்ச்சியாளர் மைக்கேல் மும்மா ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பூமியில் இருப்பதைப் போலவே ஒரு வகையான நீர் செவ்வாயிலும் இருந்துள்ளது. அதாவது, இங்கு இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஒரு ஆக்ஸிஜன் அணு சேர்ந்த நீர் போலவே செவ்வாயிலும் இருந்துள்ளது.

அதேசமயம் இன்னொரு வகையான நீரும் செவ்வாயில் இருந்திருக்கிறது. அந்த வகையான நீர், ஹைட்ரஜன் அணு ஒன்றில் உள்ள தனிமமான டியூட்ரியம் என்பதைக் கொண்டிருந்தது.

பூமியில் உள்ள நீரில் இருக்கும் டியூட்ரியத்தின் அளவைக் காட்டிலும், செவ்வாயில் எட்டு மடங்கு அதிகமாக டியூட்ரியம் இருந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, செவ்வாய் கிரகத்தை 137 மீட்டர் ஆழத்தில் மூழ்கடித்துவிடக் கூடிய அளவுக்கு ஒரு காலத்தில் அந்தக் கடலின் நீர் அளவு இருந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

"இந்த அளவுக்கான நீர், பல ஆண்டு காலமாக செவ்வாயில் இருந்தது என்றால், நிச்சயமாக அங்கே உயிர்கள் தோன்றி வளர்வதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்யும்" என்று கோடார்ட் விண்வெளி மய்யத்தைச் சேர்ந்த பால் மஹாஃபி தெரிவித்துள்ளார்.

Share