Home 2015 ஆகஸ்ட் பிரபஞ்ச ரகசியம் 25
புதன், 21 அக்டோபர் 2020
பிரபஞ்ச ரகசியம் 25
Print E-mail

பிரபஞ்ச ரகசியம் தொடரில் தொடர்ந்து பல புதிய தகவல்களைக் கண்டுவருகிறோம். இதன் தொடர்ச்சியாக சூரியனை விட 40 லட்சம் மடங்கு ஒளியை உமிழும் குவாசர் பற்றிக் காணலாம்,

குவாசர் (Qusar)

நமது பால்வெளிமண்டலத்தில் உள்ள கோடிக்கணக்கான விண்மீன்கள், ஒளிர்முகில்கூட்டம் போன்றவற்றுடன் பல்வேறு வகையான ஒளிஉமிழும் பொருள்களும், எந்த ஒரு விண்மீனின் ஈர்ப்பிற்கும் கட்டுப்படாமல் சுற்றிக்கொண்டு இருக்கும் இருண்ட கோள்கள் உண்டு, ஒளி உமிழும் பொருட்களில் முக்கியமான ஒன்று குவாசர் ஆகும்.

குவாசர் என்றால் என்ன?

1600-களில் இருந்து துவங்கிய தொலைநோக்கி யுகத்தில் கண்களால் பார்த்த சில பொருட்களும், ஊகிக்கப்பட்ட சிலபொருட்களும் இந்தப் பெருவெளியில் உண்டு என்று கருதப்பட்டது. கணக்கீடுகளின்படி ஊகிக்கப்பட்டவற்றில் எடுத்துக்காட்டாக கருந்துளை மற்றும் குவாசர்கள் போன்றவை. அதிநவீன தொலை-நோக்கிகள் வந்த பிறகு அறிவியலாளர்கள் அதனைப் படம் பிடித்து நம் பார்வைக்கு வைத்தனர்.

1960-ஆம் ஆண்டு முதல் முதலாக காந்த அலை தொலைநோக்கி (ரேடியோ டெலஸ்கோப்) நிறுவப்பட்டு ஆர்வமுடன் வானவெளியை அறிவியலார்கள் ஆய்வு செய்துவந்தனர்.

முக்கியமாக ரோபர்ட் சி பைரட் என்பவர் அமெரிக்காவின் வர்சீனியா என்ற மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள Green Bank Telescope (GBT) என்ற தொலைநோக்கி வழியாகப் பார்வையிட்டார்.

அப்போது சில இடங்களில் விண்மீன்களை விட பிரகாசமான துடிக்கும் விண்மீன்களைக் கண்டார்கள், அதனைத் தொடர்ந்து ஆய்வு செய்தபோது அது விண்மீன் அல்ல, ஒளி உமிழும் பிரமாண்டமான பொருள் என்பதை அறிந்துகொண்டார். நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள எண்ணிடலங்கா விண்மீன்களிடையே வித்தியாசமான குணநலன்கள் கொண்ட இந்த ஒளி உமிழும் பொருளுக்கு குவாசர் என்று பெயரிட்டார்.

முதலில் ஒளிவேகத்தில் நகரும் பொருள் என்று தவறாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகே இதன் துடிப்பால் நகருவது போன்ற தோற்றம் நமக்கு காட்சிதருகிறது என்று கண்டறியப்பட்டது.

குவாசர்களின் ஆற்றல் குறித்த உறுதியான தகவல்களை 1980-ல் தான் விண்வெளி ஆய்வாளர்கள் உறுதிசெய்தனர்.

08279+5255, என்று பெயர் சூட்டப்பட்ட குவாசர் லினக்ஸ் என்ற விண்மீன் குழுமத்தை ஆய்வு செய்துகொண்டிருக்கும் போது கண்டறியப்பட்டது.

அதிக அளவு நீராவி மற்றும் தூசுகள் இந்த குவாசர்களில் வெளிப்பரப்பில் உள்ளது. இதன் இடைப்பகுதியில் அதிக அளவு அழுத்தமுள்ள வாயுக்கள் கோடிக்கணக்கான பாரன்ஹீட் வெப்பத்தை உமிழ்ந்துகொண்டு இருக்கிறது. இதன் மையப்பகுதியில் கருந்துளை எனப்படும் பிளாக்ஹோல் கண்டறியப்பட்டது.

குவாசர்களின் மையப்பகுதியில் உள்ள கருந்துளைகளுக்கும் சூப்பர் நோவாவிற்குப் பிறகு உருவாகும் கருந்துளைக்கும் ஒரே மாதிரி குணநலன்கள் காணப்படுவதால் குவாசர்கள் சூப்பர் நோவாவிற்குப் பிறகு உருவாகி-யிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

UDFY- -38135539 என்பது சுமார் 6000 ஒளிஆண்டு தூரமுள்ள மனித இனம் கண்ட முதல் குவாசர் ஆகும்.

குவாசர் 08279+5255

1998-ஆம் ஆண்டு குவாசர் 08279+5255  கண்டுபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இது ஒரு ஒளிமறைப்புத் தன்மையுடன் கூடிய மிகபெரிய விண்மீன் என்று கணிக்கப்பட்டது. நீண்ட ஆய்விற்குப் பிறகு இது குவாசர் என உறுதிசெய்யப்பட்டது.

லினக்ஸ் விண்மீன் குழுமத்தில் காணப்படும் இந்த குவாசர் 08279+5255 அதிக அளவு காந்தக்கற்றைகளை வெளியிட்டுக்கொண்டு உள்ளது ஆகையல் இதன் மேற்பகுதிபெரும்பாலனா சமயங்களில் கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.

குவாசர் உருவாக்கம்

ஹைபர் நோவாவிற்குப் பிறகு தொடர் வினைகள் ஏற்படும் போது நிறைகுறைந்த  ஹைட்ரஜன்,ஹீலியம்,லித்தியம் ஆகியன இணைந்து பேரொளிப்புதர்களை உருவாக்குகிறது. இந்தப் போரளிப்புதர்களில் இருந்து பிறந்த பிரமாண்டமான ஒளிவெள்ளம் கொண்ட பொருள் தான் இந்தக் குவாசர்கள்.

சூரிய நகலைப் போன்ற விண்மின்

கோடையில் நாம் காணும் விண்மீன் குழுமங்களில் சாதாரனமாக நமது கண்களுக்கு விருந்தளிக்கும் இரண்டு விண்மீன் கூட்டங்கள் ஆகும். ஒன்று ஆல்பா ஓரைகா, மற்றொன்று லினெக்ஸ்(Lynx)  ஆகும்

ஆல்பா ஒரைகா என அழைக்கப்படும் காபெல்லா மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட வீண்மீன் ஆகும். இது கோடைகாலத்தில் தெளிவான இரவு வானத்தில்தெரியும் 6 வது பிரகாசமான விண்மீன்.

இந்த விண்மீனைப் பற்றி அக்கால விண்வெளி ஆய்வாளர்கள் சூரியனின் நகல் என நினைத்தனர். இதற்குக் காரணம் இதன் நிறமும்,புற வெப்ப நிலையும், சூரியனைப் போலவே இருந்ததுதான்.

ஆனால் தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவில் காபெல்லா விண்மீன் சூரியனிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு விண்மீன் ஆகும். இந்த விண்மீன் நமது பூமியில் இருந்து 42 ஒளி ஆண்டுகள் தொலைவில்  அமைந்துள்ள மஞ்சள் நிறங்கொண்ட இரட்டைவிண்மீன் ஆகும் இதில் காபெல்லா ஏ என்ற முதல் விண்மீன் நமது சூரியனைவிட 12 மடங்கு பெரியது, சூரியனை விட 8 மடங்கு பிரகாசமிக்கது.

காபெல்லா பி என்ற துணை விண்மீன் நமது சூரியனைவிட 7 மடங்கு பெரியதாகவும் 50 மடங்கு பிரகாசத்துடனும் காணப்படுகின்றது.

இவ்விரு பெரு விண்மீன்களுக்கும் இடைப்பட்ட தொலைவு ஏறக்குறைய பூமியின் சுற்றுப் பாதையின் ஆரத்திற்குச் சமமானது.  இந்த இரட்டைவிண்மீன்களை சாதாரனமாக பகுத்துக் காண்பது மிகவும் கடினமாகும். எனினும் இதனை நிறமாலைப் பகுப்பாய்வு மூலம் அடையாளம் காணலாம்.

ஆல்பா ஏ என்றவிண்மீனை ஆல்பா பி என்ற விண்மீன் 104 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது.

சுமார் 8 பெரிய விண்மீன்களும் சுமார் 30க்கும் மேற்பட்ட சிறிய விண்மீன்களை உள்ளடக்கிய ஓரைகா விண்மீன் மண்டலம் ஆகஸ்ட் முதல் வாரம் முதல் செப்டம்பர் முதல்வாரம் வரை தென் இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் தெளிவாகத் தெரியும்.

இந்த விண்மீன் குழுமத்தில் உள்ள எப்சிலான் ஓரைகா என்ற விண்மீனை 2009-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவினாலான தூசி மண்டலம் மறைத்தது. இதனால் பல மில்லியன் கிலோ மீட்டர் தூரம் இருளில் மூழ்கியது. இந்த தூசிமண்டலம் ஏற்கனவே இறந்துபோன விண்மீன்களில் இருந்து புறப்பட்ட கரியமிலவாயுக்கள் மற்றும் நீராவி அடங்கிய தூசுக்கள் ஆகும்.

இது போன்ற தூசிமண்டலம் நமது சூரியக்குடும்பத்தில் நுழைந்துவிட்டால் நமது காற்றுமண்டலத்தில் பரவியுள்ள பிராணவாயு உறிஞ்சப் பட்டுவிடும். மற்றும் காற்றுச் சுழற்சி தடைபட்டு உயிரினம் அழிந்துவிடும் பேரபாயம் உள்ளது. ஆனால் நமது சூரியக்குடும்பத்திற்கு அருகில் எந்த ஒரு தூசிமண்டலமும் காணப்படவில்லை என்பது ஆறுதலான செய்தியாகும்

லினெக்ஸ் (Lynx)

கோடைவானில் நமக்கு எளிதில் தெரியும் மற்றோரு விண்மீன் குழுமம் லினெக்ஸ்(Lynx)
எனப்படும் பூனை விண்மீன் மண்டலம் ஆகும்.   கோடைவானில்  வடக்குதிசையில் அர்சா மேஜருக்கும், ஓரைகாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. இதில் 60 விண்மீன்கள் இருப்பதை அறிந்துள்ளனர்.

விண்ணியல் அறிவியலாளர்கள் கண்டறிந்த விண்மீன்குழுமங்களில் அதிக அளவு இரட்டை விண்மீன்கள் இந்தக் குழுமத்தில் உள்ளன. அதே போல் இந்தக் குழுமத்தில் 19 லின்சிஸ் என்ற விண்மீன் மூன்று விண்மீன்களை அருகருகே கொண்டதாக உள்ளது.

போலந்து நாட்டு வானவியலாளரான ஜோகன்ஸ் ஹெவிலியஸ் இந்த புதிய வட்டார விண்மீன் கூட்டத்தை 17 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார். லினெக்ஸ் என்பது ஒரு வகையான காட்டுப் பூனையாகும்.

இது கூர்மையாகப் பார்க்கும் இயல்புடையது. லினெக்ஸ் போன்று கூர்மையான கண்பார்வை உள்ளவர்களால் மட்டுமே இவ்வட்டாரத்தை இனமறிய முடியுமென்பதால் இதற்கு லினக்ஸ் என்று பெயரிட்டதாக ஹெவிலியஸ் கூறுவார்.

இக்கூட்டத்தில் உள்ள ஆல்பா லின்சிஸ் ஒரு இரட்டை விண்மீனாகும். இந்த விண்மீன் ஆரஞ்சு நிறமும் 3.2 தோற்ற ஒளிப்பொலிவெண்ணும் கொண்டு அர்சா மேஜர் என்ற கற்பனைக் கரடி உருவம் கொண்ட விண்மீன் குழுமத்தின்  முன்னங்காலிற்கு அருகாமையில் 165 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த ஆல்பா லின்சிஸ் பிரகாசமான விண்மீன் ஒளிப்பொலிவெண் 6 உடைய ஒரு ஆல்பா பி லின்ஸிச் என்ற விண்மீனை 700 ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன் சுற்றி வருகிறது.

19 லின்சிஸ் என்ற பெயர்கொண்ட ஒரு விண்மீன் ஒரு மூன்று விண்மீன்கள் ஒன்றுசேர்ந்த தோற்றம் உடையதாகும், . இதில் ஒளிப்பொலிவெண் 5.8 உடைய ஒரு விண்மீனும் 6.9 கொண்டு ஓரளவு நெருக்கமாக உடைய ஓரு விண்மீனும் இவற்றிலும் நெடுந்தொலைவு விலகி ஒளிப்பொலிவெண் 8 கொண்ட ஒரு விண்மீனும் இதில் சுற்றி வருகின்றன.

(பயணிக்கலாம்)

Share