பிஞ்சு சமையல்
Print

 

தேவையான பொருள்கள்:

= வெள்ளை அவல் அல்லது சிவப்பு அவல்

= கரும்புச் சர்க்கரை அல்லது சீனி துருவிய அல்லது நறுக்கிய தேங்காய்

= வேர்க்கடலை அல்லது பொட்டுக்கடலை

= பால் அல்லது தண்ணீர்.

செய்முறை:

ஒரு சிறிய பாத்திரத்தில் அவலினைப் போட்டு காய்ச்சிய பால் அல்லது தண்ணீரை சிறிதளவு ஊற்றி (அவல் மூழ்கும் அளவு மட்டும்) பத்து நிமிடங்கள் கழித்துப் பார்த்தால் அந்த பால் அல்லது தண்ணீரை இழுத்துக்கொண்டு மென்மையாக மாறியிருக்கும்.

அதில் தேவையான அளவு கரும்புச் சர்க்கரை, தேங்காய், வேர்க்கடலை, அல்லது பொட்டுக்கடலை ஆகியவற்றைக் கலந்து சத்துமிகுந்த சுவைமிகுந்த உடனடியாக செய்து உண்ணக் கூடிய உணவினை தயாரித்து மகிழலாம்.

- புகழ்

Share