Home 2015 அக்டோபர் உலக நாடுகள் - பின்லாந்து
புதன், 28 அக்டோபர் 2020
உலக நாடுகள் - பின்லாந்து
Print E-mail

அமைவிடமும் எல்லைகளும்:

¨    வட அய்ரோப்பா கண்டத்தில் ஆர்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ள நாடு. அலுவலக பெயர் பின்லாந்து குடியரசு (Republic of  Finland).

¨    இதன் எல்லை நாடுகளாக ஸ்வீடன், நார்வே, இரஷ்யா போன்ற நாடுகளும், பின்லாந்து வளைகுடாவும், பால்டிக் கடலும் அமைந்துள்ளன.

¨    இதன் பரப்பளவு 338,424 சதுர கிலோ மீட்டர்கள். பரப்பளவில் உலகில் 64ஆம் இடத்தை வகிக்கிறது.

இயற்கை அமைப்பும் காலநிலையும்:

¨    இந்நாட்டின் பெரும்பான்மை பகுதி ஆர்டிக் வட்டத்திற்கு வடக்கே அமைந்துள்ளது.

¨    பல்லாயிரக்கணக்கான ஏரிகளும், காடுகளும், தீவுகளும் மற்றும் சதுப்பு நிலம் கொண்ட நாடாக விளங்குகிறது. இந்நாட்டின் மிகப் பெரிய ஏரியான சைமா (Saimaa) அய்ரோப்பாக் கண்டத்தின் நான்காவது பெரிய ஏரியாகும்.

¨    எண்ணிலடங்கா ஆறுகள் நாடு முழுவதும் ஓடுவதால் சதுப்பு நிலங்கள் ஏராளம் உள்ளன.

¨    நாட்டின் வடமேற்கு பகுதிகளில் மட்டுமே உயர்ந்த இடங்களில் மலைகள் அமைந்துள்ளன.

¨    வடபகுதியில் கடுமையான மற்றும் நீண்ட குளிர்கால நிலையுள்ளது. தென்பகுதியில் மிதமான காலநிலை நிலவுகிறது.

மக்கள் - மொழி:

¨    2015 அனுமான கணக்கெடுப்புப்படி இந்நாட்டினர் மொத்தம் 5,483,424 பேர். இவர்களில் பெரும்பான்மை மக்கள் ஃபின் இனத்தவர்கள். சாமி (லாப்) இன மக்களும் இருக்கிறார்கள்.

¨    ஃபின்னிஷ் மற்றும் ஸ்வீடிஷ் ஆகியவை ஆட்சி மொழிகள். சிறுபான்மை சாமி மக்கள் ஃபின்னோ யூக்ரிக் மொழி பேசுகின்றனர்.

¨    லூத்தரணிய மதமும் கிழக்கு பழமைவாத மதமும் உள்ளன.

¨    மக்கள் தொகைப்படி இந்நாடு உலகின் 114ஆம் இடத்தையும், மக்கள் நெருக்க அடிப்படையில் உலகின் 201ஆவது இடத்தையும் வகிக்கிறது.

தொழிலும் வணிகமும்:

¨    இந்நாட்டின் முக்கியத் தொழில்கள் இரண்டு. ஒன்று உலோகத் தொழில். இன்னொன்று வனம் சார்ந்த தொழில்.

¨    உலோகம் சார்தொழில்களில் கப்பல் கட்டுதல், கார் தொழிற்சாலைகள், எந்திரங்கள் உருவாக்கம், மின்னணுப் பொருட்கள் (Electronics) மற்றும் இரும்பு, தாமிர, குரோமிய உலோகங்களை உருவாக்குதல்.
உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும் பல்வேறு நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன.

¨    காடுகள் சார்ந்த தொழில்களில் மரச்சாமான்கள், காகிதம் தயாரிப்பு, பல்பு தயாரிப்பு, காகித அட்டைகள் மற்றும் மரங்கள் ஏற்றுமதி ஆகியவை.

¨    இவையன்றி எரிபொருள் மற்றும் வேதிப்பொருட்கள் தொழிற்சாலைகளும் ஆங்காங்கே அமைந்துள்ளன.

¨    விவசாயம் மிகக் குறைந்த அளவே செய்யப்படுகிறது. அதிலும் கால்நடை பண்ணை முக்கிய இடத்தை வகிக்கிறது.

சுற்றுலா மற்றும் போக்குவரத்து:

¨    பின்லாந்தின் நில அமைப்பு முறை ஃபைன் வகைக் காடுகளாலும், மலைக் குன்றுகளாலும் பெருமளவு சூழப்பட்டுள்ளதாலும் ஏராளமான சிறிய, பெரிய ஏரிகள் அமைந்துள்ளதாலும் சிறந்த சுற்றுலாத் தளங்களைக் கொண்ட நாடாக விளங்குகிறது.

¨    மிகப் பழமையான மற்றும் புதிய 37 தேசியப் பூங்காக்கள் பின்லாந்து வளைக்குடாவின் தென்பகுதியில் உள்ளன.

¨    பால்டிக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஹெல்சென், துர்கு, டால்லின் போன்ற நகரங்கள் குறிப்பிடத்தக்க சுற்றுலா நகரங்களாகும்.

¨    25 விமான நிலையங்களும், 5,865 கிலோ மீட்டர் நீளமுள்ள இரயில் போக்குவரத்தும் முக்கியமானவை.

அரசும் நிர்வாகமும்:

¨    பின்லாந்து 19 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை ‘மாகுந்தா’ என்று பின்னிஷ் மொழியிலும், ‘லான்ட்ஸ்காப்’ என்ற ஸ்வீடிஷ் மொழியிலும் வழங்கப்படுகின்றன. அவை மாகாண குழுக்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.

¨    நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் விளங்குகிறார். தற்போதைய குடியரசுத் தலைவர் சாலி நிநிஸ்டோ.

¨    நாட்டின் நிர்வாகத்தில் அமைச்சர் குழு (Cabinet) முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தலைவராக பிரதமர் இருக்கிறார். தற்போதைய பிரதமர் ஜூகா சிப்லா.

வரலாற்றுத் தகவல்கள்:

¨    பின்லாந்தில் கி.மு.8000 ஆண்டு கற்காலத்திலேயே மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

¨    பின்னர் 12ஆம் நூற்றாண்டு முதல் 1809 வரை பின்லாந்து ஸ்வீடன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.

¨    பின்னர் ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்து 1917இல் விடுதலையை அறிவித்தது.

¨    இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படைகளுடன் சேர்ந்து இரஷ்யாவைத் தாக்கியது.

¨        1955இல் அய்.நா. உறுப்பு நாடானது.

¨        இதன் தலைநகர்: ஹெல்சிங்கி.

அமைவிடமும் எல்லைகளும்:
¨    வட அய்ரோப்பா கண்டத்தில் ஆர்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ள நாடு. அலுவலக பெயர் பின்லாந்து குடியரசு (ஸிமீஜீuதீறீவீநீ ஷீயீ  
திவீஸீறீணீஸீபீ).
¨    இதன் எல்லை நாடுகளாக ஸ்வீடன், நார்வே, இரஷ்யா போன்ற நாடுகளும், பின்லாந்து வளைகுடாவும், பால்டிக் கடலும் அமைந்துள்ளன.
¨    இதன் பரப்பளவு 338,424 சதுர கிலோ மீட்டர்கள். பரப்பளவில் உலகில் 64ஆம் இடத்தை வகிக்கிறது.
இயற்கை அமைப்பும் காலநிலையும்:
¨    இந்நாட்டின் பெரும்பான்மை பகுதி ஆர்டிக் வட்டத்திற்கு வடக்கே அமைந்துள்ளது.
¨    பல்லாயிரக்கணக்கான ஏரிகளும், காடுகளும், தீவுகளும் மற்றும் சதுப்பு நிலம் கொண்ட நாடாக விளங்குகிறது. இந்நாட்டின் மிகப் பெரிய ஏரியான சைமா (ஷிணீவீனீணீணீ) அய்ரோப்பாக் கண்டத்தின் நான்காவது பெரிய ஏரியாகும்.
¨    எண்ணிலடங்கா ஆறுகள் நாடு முழுவதும் ஓடுவதால் சதுப்பு நிலங்கள் ஏராளம் உள்ளன.
¨    நாட்டின் வடமேற்கு பகுதிகளில் மட்டுமே உயர்ந்த இடங்களில் மலைகள் அமைந்துள்ளன.
¨    வடபகுதியில் கடுமையான மற்றும் நீண்ட குளிர்கால நிலையுள்ளது. தென்பகுதியில் மிதமான காலநிலை நிலவுகிறது.
மக்கள் - மொழி:
¨    2015 அனுமான கணக்கெடுப்புப்படி இந்நாட்டினர் மொத்தம் 5,483,424 பேர். இவர்களில் பெரும்பான்மை மக்கள் ஃபின் இனத்தவர்கள். சாமி (லாப்) இன மக்களும் இருக்கிறார்கள்.
¨    ஃபின்னிஷ் மற்றும் ஸ்வீடிஷ் ஆகியவை ஆட்சி மொழிகள். சிறுபான்மை சாமி மக்கள் ஃபின்னோ யூக்ரிக் மொழி பேசுகின்றனர்.
¨    லூத்தரணிய மதமும் கிழக்கு பழமைவாத மதமும் உள்ளன.
¨    மக்கள் தொகைப்படி இந்நாடு உலகின் 114ஆம் இடத்தையும், மக்கள் நெருக்க அடிப்படையில் உலகின் 201ஆவது இடத்தையும் வகிக்கிறது.
தொழிலும் வணிகமும்:
¨    இந்நாட்டின் முக்கியத் தொழில்கள் இரண்டு. ஒன்று உலோகத் தொழில். இன்னொன்று வனம் சார்ந்த தொழில்.
¨    உலோகம் சார்தொழில்களில் கப்பல் கட்டுதல், கார் தொழிற்சாலைகள், எந்திரங்கள் உருவாக்கம், மின்னணுப் பொருட்கள் (ணிறீமீநீtக்ஷீஷீஸீவீநீs) மற்றும் இரும்பு, தாமிர, குரோமிய உலோகங்களை உருவாக்குதல்.
உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும் பல்வேறு நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன.
¨    காடுகள் சார்ந்த தொழில்களில் மரச்சாமான்கள், காகிதம் தயாரிப்பு, பல்பு தயாரிப்பு, காகித அட்டைகள் மற்றும் மரங்கள் ஏற்றுமதி ஆகியவை.
¨    இவையன்றி எரிபொருள் மற்றும் வேதிப்பொருட்கள் தொழிற்சாலைகளும் ஆங்காங்கே அமைந்துள்ளன.
¨    விவசாயம் மிகக் குறைந்த அளவே செய்யப்படுகிறது. அதிலும் கால்நடை பண்ணை முக்கிய இடத்தை வகிக்கிறது.
சுற்றுலா மற்றும் போக்குவரத்து:
¨    பின்லாந்தின் நில அமைப்பு முறை ஃபைன் வகைக் காடுகளாலும், மலைக் குன்றுகளாலும் பெருமளவு சூழப்பட்டுள்ளதாலும் ஏராளமான சிறிய, பெரிய ஏரிகள் அமைந்துள்ளதாலும் சிறந்த சுற்றுலாத் தளங்களைக் கொண்ட நாடாக விளங்குகிறது.
¨    மிகப் பழமையான மற்றும் புதிய 37 தேசியப் பூங்காக்கள் பின்லாந்து வளைக்குடாவின் தென்பகுதியில் உள்ளன.
¨    பால்டிக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஹெல்சென், துர்கு, டால்லின் போன்ற நகரங்கள் குறிப்பிடத்தக்க சுற்றுலா நகரங்களாகும்.
¨    25 விமான நிலையங்களும், 5,865 கிலோ மீட்டர் நீளமுள்ள இரயில் போக்குவரத்தும் முக்கியமானவை.
அரசும் நிர்வாகமும்:
¨    பின்லாந்து 19 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை ‘மாகுந்தா’ என்று பின்னிஷ் மொழியிலும், ‘லான்ட்ஸ்காப்’ என்ற ஸ்வீடிஷ் மொழியிலும் வழங்கப்படுகின்றன. அவை மாகாண குழுக்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.
¨    நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் விளங்குகிறார். தற்போதைய குடியரசுத் தலைவர் சாலி நிநிஸ்டோ.
¨    நாட்டின் நிர்வாகத்தில் அமைச்சர் குழு (சிணீதீவீஸீமீt) முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தலைவராக பிரதமர் இருக்கிறார். தற்போதைய பிரதமர் ஜூகா சிப்லா.

Share