கண்களிரண்டைக் காப்போமே!
Print

புலியைப் பார்ப்பதும் கண்ணாலே! - புள்ளி
மானைப் பார்ப்பதும் கண்ணாலே!

இந் நாளை பார்ப்பதும் கண்ணாலே! - சீறும்
வாளைப் பார்ப்பதும் கண்ணாலே!

மண்ணைப் பார்ப்பதும் கண்ணாலே! - அழகு
விண்ணைப் பார்ப்பதும் கண்ணாலே!

பனியை பார்ப்பதும் கண்ணாலே! - சுவைக்
கனியை பார்ப்பதும் கண்ணாலே!

மரத்தை பார்ப்பதும் கண்ணாலே! - நம்
கரத்தை பார்ப்பதும் கண்ணாலே!

அழகு என்னும் பேராலே - அதன்
இயல்பைக் கெடுக்க வேண்டாமே!

மஸ்காரா மைகள் போடாமல் - நம்
கண்களிரண்டைக் காப்போமே!

_ வி.யாழ்ஒளி
சென்னை

Share