Home 2015 டிசம்பர் பிஞ்சு கவிதைகள்
வியாழன், 09 ஏப்ரல் 2020
பிஞ்சு கவிதைகள்
Print E-mail

பெரியார் பணி முடிப்போம்
வாழ்க! வாழ்க! தந்தை பெரியார்
மத ஜாதிகளை ஒழித்த பெரியார்
கடவுள் இல்லை என்ற பெரியார்

குழந்தைகள் காப்பகம் திறந்த பெரியார்
தமிழ் பெயர் சூட்டிய தந்தை பெரியார்
தந்தை பெரியார் தந்தது சுயமரியாதை
மறைந்தாலும் அவர் கொள்கை பின்பற்றுவோம்

சொன்னபடி நடப்போம் பெரியார் பணி முடிப்போம்
வாழ்க! வாழ்க! வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே

- மோ.பாவேந்தன்

யாழ் தமிழ் ஊற்று!

தமிழை நீ மதி
தமிழுக்குச் செய்யாதே சதி
தமிழுக்கு நீ செய் நல்ல தொண்டு
தமிழில் நீ ஆகாதே மண்டு
தமிழை அனைவருக்கும் கற்பி
நீயும் ஆகலாம் தமிழ்ச் சிற்பி
அறிவுக்கு இடாதே வேலி
தமிழை நீ செய்யாதே கேலி

- திராவிடப் பிஞ்சு வி.யாழ்ஒளி

Share