Home 2015 டிசம்பர் தங்கத் தாத்தா வாழ்க்கையிலே...
வியாழன், 09 ஏப்ரல் 2020
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே...
Print E-mail

அக்கா அவர்தான்...!

பெரியார் என்னும் பெரும்பேறு
பகுத்தறிவு வெடிக்கும் பழத்தாரு
நரியார் நடுங்கும் அடலேறு
நலிவுகள் போக்கும் தேன்சாறு!

அறிவு மழையாம் செவ்வானம்
அறிவுரை நமக்குச் சன்மானம்
உரிமைக் குரலோ தன்மானம்
உலகைக் காக்கும் உயிர்ப்பானம்!

செக்கச் சிவந்த செம்மேனி
சூரியன் போன்ற சுடர்ஏணி
அக்கா அவர்தான் அருள்மேனி
அகிலம் போற்றும் தமிழ்ஞானி!

உழைப்பில் அவரோ அருந்தேனீ
உள்ளம் அன்புப் பெருங்கேணி
அழகுக் குவியல் அவர்தாண்டி
அவருக்கு நாமோ பேராண்டி!

-கவிஞர் கலி. பூங்குன்றன்

Share