தெருவோரத் தங்கங்கள்
Print

தெருவோரத் தங்கங்கள்

பெற்றோரை இழந்தோ, பெற்றோரால் கைவிடப்பட்டோ, பெற்றோருடன் தெருவோரங்களிலோ வசிக்கும் குழந்தைகளுக்கான உலக அளவிலான போட்டிகள் பிரேசிலில் 2016 மார்ச்சில் நடைபெற்றன. இதில் சென்னையைச் சேர்ந்த ஹெப்சிபா, தர்மபுரியைச் சேர்ந்த அசோக்,  ஃபாரெக்ஸ் ரோடு உஷா, சூளை சிலம்பரசன், பீச் ஸ்டேசன் சினேகா ஆகிய அய்ந்து பேர் கலந்து கொண்டார்கள்.

இவர்களில் ஹெப்சிபா பல்வேறு ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்றுள்ளார். அசோக் குண்டு எறிதலில் ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். வெற்றி பெற்று வந்த இந்த தெருவோரத் தங்கங்களைக் குறித்துக் கேள்விப்பட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து இக்குழந்தைகளை வாழ்த்தியுள்ளார்.

திறமையாளர்கள் வெல்ல சரியான வாய்ப்புக் கிடைத்தால் போதும் என்பதற்கு இவர்கள் சரியான எடுத்துக்காட்டுகள் அல்லவா?

Share