Home 2016 ஏப்ரல் உலக நாடுகள்
சனி, 10 ஜூன் 2023
உலக நாடுகள்
Print E-mail

அமைவிடமும் எல்லைகளும்:

¨    இது கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில்   அமைந்துள்ள தீவு நாடு..
¨    அப்பகுதியில் அமைந்துள்ள மூன்றாவது பெரிய நாடு.
¨    அதன் வடக்கே துருக்கியும், கிழக்கே சிரியா மற்றும் லெபனான் நாடுகளும் தென்கிழக்கே இஸ்ரேலும், தெற்கே எகிப்தும், மேற்கே கிரிஸ் நாடும் அமைந்துள்ளன.

இயற்கை வளமும் - இயற்கை அமைப்பும்:

¨    இந்நாட்டின் இயற்கை அமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்தவை ட்ரூட்ஸ் மலையும், கிரினியா மற்றும் மத்திய சமவெளிப் பகுதிகளும். இப்பகுதியை பேடியஸ் மற்றும் கொன்ஹில் ஆறுகள் வளப்படுத்துகின்றன.
¨    சைப்ரஸ் தீவின் உயரமான சிகரம் 1,952 மீட்டர் உயரம் கொண்ட ஒலிம்பஸ் மலை.
¨    இதன் காலநிலை _ மத்திய தரைக்கடல் தட்பவெப்ப காலநிலையாகும்
சைப்ரஸ் தீவு  பல்வேறு  தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இயற்கை வாழ்விடமாக அமைந்துள்ளது. சைப்ரஸ்ஸில் 374  பறவை இனங்களும் பல அரிய வகை பலூட்டிகளும் ஊர்வன இனங்களும் உள்ளன.

மக்களும் பண்புகளும்:

¨    இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 11,41,166 (2013 கணக்கெடுப்பின்படி).
¨    ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 123 பேர் வசிக்கின்றனர்.
¨    கிரேக்க மொழியும், துருக்கி மொழியும் அலுவலக மொழிகளாக உள்ளன.
¨    அர்மேனியன் மொழியும், சைப்ரியாட் அராபிக் மொழியும் சிறுபான்மை மக்களால் பேசப்படுகின்றன. வட்டார மொழிகளாக மேலும் சில மொழிகள் பேசப்படுகின்றன.
¨    இந்நாட்டு மக்கள் இன, மொழி, பண்பாடு அடிப்படையில் கிரேக்க சைப்ரட்டிக், துருக்கிய சைப்ரட்டிக், அர்மேனியர்கள், மாரோநைட்ஸ் ஆகிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றனர்.
¨    இம்மக்களில் 78% பேர் கிரேக்க பழமைவாத மதப் பிரிவைச் சார்ந்தவர்கள். 20% பேர் இஸ்லாமிய மதப் பிரிவைச் சார்ந்தவர்கள், மற்றவர்கள் 2% பேர்.
¨    மொத்த மக்கள் தொகையில் 97.6 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

பொருளாதாரம்:

¨    இந்நாடு வேளாண்மையை முக்கிய பொருளாதாரக் கூறாகக் கொண்ட நாடு.
¨    முக்கிய வேளாண் விளைபொருட்கள் பார்லி, எலுமிச்சை, உருளைக்கிழங்கு, ஆலிவ், கோதுமை மற்றும் கோழிகள், பால் போன்றவையாகும்.
¨    நாட்டின் முக்கிய இயற்கை வளங்கள் தாமிரம், ஜிப்சம், உப்பு, குரோமியம் போன்றவையாகும்.
¨    முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் எலுமிச்சை, மருந்துகள், சிமெண்ட், துணிகள், மரச்சாமான்கள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவையாகும்.
¨    நாட்டின் முக்கிய இறக்குமதிப் பொருட்கள் எந்திரத் தளவாடங்கள், வாகன உதிரி பாகங்கள், பெட்ரோலியம் போன்றவையாகும்.
¨    மேலும் உற்பத்தி மற்றும் வர்த்தகம் சார்ந்துள்ள தாராள மய வர்த்தகப் பொருளாதார முறையை பின்பற்றுகிறது.
¨    வணிகக் கப்பல் போக்குவரத்தில் உலகில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.
¨    நாட்டின் நாணயம் யூரோ.

அரசாங்க அமைப்பு முறை:

¨    நாட்டின் தலைநகர் நிகோசியா.
¨    சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள பல கட்சி குடியரசு முறையுடன் ஓர் அவையைக் கொண்ட குடியரசு நாடு.
¨    நாட்டின் தலைவராகவும், அரசாங்கத்தின் அதிபர் விளங்குகிறார்.
¨    தற்போதைய அதிபர் நிகோஸ் அன்ஸ்டாசியடஸ்.

வரலாற்றுச் சுவடுகள்:

¨    புதிய கற்காலத்தின் தொடக்கத்திலேயே மனிதர்கள் சைப்ரஸில் வாழ்ந்து வந்ததற்கான தடயங்கள் உள்ளன.
¨    உலோகக் காலத்தில் மைசீனியர்கள் மற்றும் அக்சீனியர்கள் குடியேறி, கிரேக்க மொழியையும், பண்பாட்டையும் அறிமுகப்படுத்தினர்.
¨    கி.மு.9ஆம் நூற்றாண்டில் பீனீஷயர்கள் இங்குவந்து குடியேறினர்.
¨    கி.மு.58இல் ரோமானியப் பேரரசுடன் இணைந்தது.
¨    கி.பி.4ஆம் நூற்றாண்டில் பைசாண்டிஸ் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.
¨    1191ஆம் ஆண்டு ஆங்கிலேய மன்னர் முதலாம் ரிச்சர்ட் (லயன் ஹார்ட்) இந்நாட்டை  வெற்றிகொண்டார்.
¨    1489 முதல் வெனிஷியப் பேரரசின் ஒரு பகுதியானது.
¨    1573இல் ஓட்டோமன் பேரரசால் கைப்பற்றப்பட்டது.
¨    1878இல் பிரிட்டிஷாரின் கீழ்வந்தது.
¨    1924இல் பிரிட்டிஷ் மன்னராட்சி குடியேற்ற நாடானது.
¨    1960இல் சுதந்திரம் பெற்றது. கிரேக்கர்களுக்கும், துருக்கிய சைப்ரியாட்ஸ்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தால் 1964இல் அய்.நா.வின் கண்காணிப்புக்கு உட்பட்டது.
¨    1974இல் கிரீஸ் நாட்டுடன் சைப்ரசை இணைக்கும் முயற்சி எடுக்கப்பட்டு மோதல் நீடித்தது.

Share