Home 2016 மே பிரபஞ்ச ரகசியம் 34
திங்கள், 18 ஜனவரி 2021
பிரபஞ்ச ரகசியம் 34
Print E-mail

மனிதன் பல்லாயிரம் ஆண்டுகாலமாக தான் வாழும் பூமி பற்றிய ஆய்வுகள் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் வானத்தைப் பார்த்தே பல்வேறு கதைகளை சொல்லி வந்தான். 12_-ஆம் நூற்றாண்டில் துருக்கியை ஆண்ட ஒஸ்மான் காஷி என்ற துருக்கிய சுல்தான், முதல் முதலாக பூமி பற்றிய ஒரு வரைபடம் ஒன்றை வரையுமாறு தனது அமைச்சரவையில் அறிவித்தார். அதன் பிறகு பூமி பற்றி ஆய்வு செய்யும் ஆர்வம் அய்ரோப்பா அறிவியல் ஆய்வாளர்களிடையே அதிகரித்தது.

உண்மையில் வானில் உள்ள அனைத்து கோள்களுக்கும் கிரேக்கக் கடவுள்களின் பெயர்களைச் சூட்டியவர்கள் பூமிக்கு மட்டும் எர்டே (Erde) என்ற ஜெர்மானியப் பெயரைச் சூட்டியுள்ளனர், ஜெர்மன் மொழியில் எர்டே என்றால் தரைப்பகுதி என்று பொருளாகும். இது மருவி எர்த் (Earth) என்று தற்போது அழைக்கப்படுகிறது.

நாம் வாழும் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் ஆகும். சூரியக் குடும்பத்தில் மூன்றாவதாக உள்ள கோள் பூமி. சூரியனில் இருந்து 15 கோடி கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அய்ந்தாவது பெரிய கோள். பூமியின் சுற்றளவு, வெள்ளியைவிடச் சில நூறு கிலோ மீட்டர்கள் அதிகமானது.

நமது பூமியின் உயிரோட்டத்திற்குக் காரணம் இதன் வளிமண்டலம் ஆகும்.
வளிமண்டலம் இதை ஆங்கிலத்தில் Atmosphere என்று அழைப்பார்கள். வளிமண்டலம் என்பது பல்வேறு காற்றடுக்களைக் கொண்டது. இது நமது பூமி போன்ற கோள்கள் மற்றும் நாம் இரவு நேரங்களில் பார்க்கும் அனைத்து விண்மீன்களிலும் இந்த வளிமண்டலம் உள்ளது.

நமது பூமியின் வளிமண்டலம்

பூமியின் வளிமண்டலம் அதிக அளவு நைட்ரஜனால் நிறைந்துள்ளது. இத்துடன் உயிரினங்கள் உயிர்வாழத் தேவையான ஆக்சிசன், மற்றும் தாவரங்கள், பாசிகள், பச்சையங்கள்  போன்றவை உணவு தயாரிக்கப் பயன்படும் கார்பன் டை ஆக்சைடு போன்றவை நமது வளிமண்டலத்தில் உள்ளது.

இதர கோள்களில் உள்ள வளிமண்டலத்துக்கும் நமது பூமியில் உள்ள வளிமண்டலங்களுக்கும் என்ன வேறுபாடு என்றால், இதர கோள்களில் சூரியனிலிருந்து வெளிவரும் ஆபத்து மிகுந்த புறஊதாக் கதிர் தரைதளத்தை வந்தடைகிறது. நமது பூமியின் வளிமண்டலம் இந்தப் புறஊதாக்கதிரை தடுத்து விடுகிறது. இதனால் தான் இன்றுவரை பூமி உயிரோட்டம் மிகுந்த ஒரு கோளாக உள்ளது,

நமது பூமியின் வளிமண்டலத்தை புவியியல் அறிவியலாளர்கள் அய்ந்து பிரிவாகப் .பிரித்துள்ளனர்.

1. கீழ்வளிமண்டலம் (Troposphere):

பூமியின் மேற்பரப்பிலிருந்து 18 கி.மீ வரையிலான பகுதி கீழ்வளிமண்டலம் (Troposphere) என்று அழைக்கப்படுகிறது.
70 விழுக்காடு வாயுக்களால் சூழப்பட்ட இந்த வளிமண்டல அடுக்கின் சராசரி வெப்பநிலை 14oC ஆகும். இங்குதான் பூமியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்  (கார்பன் டை ஆக்ஸைடு, நீராவி, மீத்தேன், ஓசோன்) இருக்கின்றன. மற்ற வளிமண்டலங்களை விட இது மிகவும் அடர்த்தி ஆகும். இங்கு நைட்ரஜன்

78 விழுக்காடு, ஆக்சிஜன் 21 விழுக்காடு மற்றும் பல்வேறு வாயுக்கள் உள்ளன. நமக்கு மழையைத் தரும் மேகங்கள் இந்தப் பகுதியில் உலா வரும்.

கீழ்வளிமண்டலம் மற்றும் மேல்வளிமண்டலம் ஆகிய இரண்டையும் பிரிக்கும் பகுதியை ட்ரோபோபஸ் (Tropopause)  என்று அழைப்பார்கள்.

2. மேல்வளிமண்டலம் (Stratosphere):

பூமியின் தரைப்பகுதியில் இருந்து பதினெட்டு முதல் அய்ம்பது கிலோமீட்டர் வரையிலான வளிமண்டலப்பகுதி மேல்வளிமண்டலம் (Stratosphere) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் அடிப்பகுதியில்தான் ஓசோன் மண்டலம் அமைந்துள்ளது. ஓசோன் மண்டலம் என்பது வளிமண்டலத்தின் மேல்வளிமண்டலத்தை (Stratosphere) சுற்றி போர்த்தப்பட்டுள்ள ஒரு போர்வையாகும். ஓசோன் மண்டலத்தின் அழுத்தம் பருவ நிலைக்கு ஏற்பவும், பூமியின் மேற்பரப்பில் துருவ மற்றும் நிலநடுக்கோட்டிலும் அளவு வேறுபடுகிறது.

இந்த ஓசோன்தான் சூரியனிடமிருந்து வரும், உயிரிகளுக்கு கேடு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களை சுமார் 97%_99% வடிகட்டி விடுகிறது.  ஜெட் விமானங்கள் இந்த அடுக்குகள் வரைச்  செல்லும் சில நேரத்தில் அழகிய பட்டை போல் வெண்மையான புகையைக் வெளிவிட்டுக்கொண்டு செல்லும். ஜெட் விமானங்கள் இந்தப் பகுதியில் செல்லும்போது அந்த அழகிய வடிவம் நமது பார்வைக்குத் தெரிகிறது.

3. இடைமண்டலம் (Mesosphere) :

பூமியின் வளிமண்டலத்தில்  உள்ள மூன்றாவது மிக உயர்ந்த அடுக்கு இது ஆகும். 50 _ 80 கி.மீ வரையிலான வளிமண்டலப் பகுதி இடைமண்டலம் (Mesosphere). இந்த பகுதியில் வெப்பநிலை _ மேலே செல்லச் செல்ல குறைந்து கொண்டு இருக்கும். இது மிகவும் குளிரான பகுதியாகும்.

இங்கு சராசரியாக வெப்பநிலை _-85 டிகிரி (Minus 85 degree) செல்சியஸ் என்று இருக்கும். நாம் இரவு பார்க்கும்போது எரிநட்சத்திரம் என்று கூறும் ஒளிக்கீற்றுகள் அதாவது விண் கற்கள் பூமியில் நுழையும்போது எரிந்து சாம்பலாகும் காட்சி இந்த வளிமண்டலத்தில் ஏற்படும் உயர்ந்த காற்றழுத்தத்தால் தான் உருவாகிறது.

4. வெப்பமண்டலம் (Thermosphere):

இது நான்காவது வளிமண்டல அடுக்கு ஆகும் 80 _ 690 கி.மீ வரையிலான வளிமண்டலப்பகுதி வெப்பமண்டலம் (Thermosphere): எனப்படும். இங்கு வெப்பமானது 1,500oC என்ற அளவு வரை உயரும். இங்கு உள்ள காற்று மூலக்கூறுகளின் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளது, இதன் காரணமாக இங்கு வெப்பம் அதிகமாக உள்ளது.  சர்வதேச விண்வெளி நிலையம் இந்த அடுக்கில் 320 மற்றும் 380 கி.மீ.க்கு இடையே கட்டப்பட்டு வருகிறது.

5. வெளி(எல்லை)வளிமண்டலம் (Exosphere):

இதுகடைசி அடுக்கு ஆகும். 500_-1000 கி.மீட்டரில் இந்த அடுக்கு தொடங்குகிறது. இங்கு அடர்த்தி குறைந்த ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்கள் உள்ளன.  வட தென் துருவங்களில் தோன்றும் போரியாலிஸ் போன்ற அழகிய ஒளி இந்த வளிமண்டலத்தில் சூரியனில் இருந்து வரும் காந்தப் புயல் மோதுவதால் ஏற்படுகிறது.

Share