Home 2016 மே 11 வயது பகுத்தறிவுச் சிறுவனின் உலகச் சாதனை
திங்கள், 25 ஜனவரி 2021
11 வயது பகுத்தறிவுச் சிறுவனின் உலகச் சாதனை
Print E-mail

11 வயது பகுத்தறிவுச் சிறுவனின் உலகச் சாதனை

சொல்லாய்வுச் செம்மல் குடந்தை வய்.மு.கும்பலிங்கனின் மகள் வழிப் பெயரனும், மயிலாடுதுறை “மாயவரம் டிம்பர் டெப்போ’’ தெ.முத்துக்குமார் - அறிவழகி இணையரின் இளைய மகனும் ஆகிய யுவராசன் என்னும் இளவரசன் (வயது 11; படிக்கும் வகுப்பு 7; எடை 38 கிலோ)

1250 கிலோ எடை கொண்ட அம்பாசிடர் வண்டியைத் தன் முதுகில் பெல்ட் கட்டிக் கொண்டு மயிலாடுதுறை தருமபுரம் ஆதினக் கலைக்கல்லூரி வளாகத்திலிருந்து மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் வரை இடையீடு - தொய்வு இல்லாமல் 27.03.2016 ஞாயிறு மாலை 5.30 மணியிலிருந்து 6.30 மணி 15 நொடி வரை (1 மணி 15 நொடி) இழுத்து உலகச் சாதனை நிகழ்த்தி உள்ளார்.

மூடக்கருத்துப்படி ஞாயிற்றுக்கிழமையின் கொழுத்த இராகு காலம் என்று கருதப்படும் நேரத்தில் தான் இச்சாதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் எவ்வித மூடநம்பிக்கைகளுக்கும் இடமின்றி இச்சாதனையை நிகழ்த்தி அனைவரின் வாழ்த்துகளையும் பெற்றார் பிஞ்சு இளவரசன்.

Share