Home 2016 மே தங்கத் தாத்தா வாழ்க்கையிலே...
திங்கள், 18 ஜனவரி 2021
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே...
Print E-mail

தங்கத் தாத்தா வாழ்க்கையிலே...

அய்யா பாதை

தட்டு தட்டு கைதட்டு
தத்துவத் தந்தை நம்பெரியார்
கொட்டி முழக்கிய கொள்கைதான்
கட்டி ஆளுது உலகென்று
- தட்டு...

பாடு பாடு பண்பாடு
பகுத்தறிவுத் தந்தை நம்பெரியார்
போட்டுத் தந்த பாதைதான்
புவியை நடத்தும் புகழென்று
- பாடு...

ஏறு போலே நடந்துபோ
எங்கும் தலையே நிமிர்ந்துபோ!
கூறுவார் இல்லை நம்தந்தை
கொள்கைச் செங்கோல் குறைகூற
- ஏறுபோலே...

திடமாய்த் தோளை நீதூக்கு
தீவிரப் புயலாய் நீ வீசு
கடவுளை நம்பிய கூட்டமெல்லாம்
கரையுது பெரியார் சொல்கேட்டு!
- திடமாய்த்...

அய்யா பாதை அதோ பார்!
அறிவுத் தோட்டம் அங்கே பார்!
பொய்மை அழிக்கும் போரைப்பார்!
புத்தியாய்ப் பிழைக்கும் வழியைப் பார்!
- தட்டு...

Share