

அமைவிடமும் எல்லைகளும்:
¨ வடஅமெரிக்கா கண்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய நாடு கனடா. ¨ உலகில் பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய நாடு. (முதலிடம் இரஷ்யா) ¨ வடக்குப் பகுதியில் ஆர்டிக் பெருங்-கடலையும் கிழக்குப் பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடலையும், மேற்குப் பகுதியில் பசிபிக் பெருங்கடலையும் தெற்குப் பகுதியில் அமெரிக்க அய்க்கிய நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. ¨ உலகில் மிகப்பெரிய நிலவழி எல்லை அமெரிக்கா -_ - கனடா எல்லையே ஆகும். ¨ வடமேற்கு பகுதியில் அமெரிக்க அய்க்கிய நாடுகளின் ஒரு பகுதியான அலாஸ்கா அமைந்துள்ளது. கிரீன்லாந்து கனடாவிற்கு வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. ¨ நாட்டின் மொத்தப் பரப்பளவு 99,84,670 சதுர கிலோ மீட்டர். ¨ தலைநகர் ஒட்டோவா.
இயற்கை அமைப்பும் காலநிலையும்:
¨ கனடா இராக்கி மலைத்தொடரையும் எட்டு முக்கிய வனப்பகுதிகளையும் கொண்டது. ¨ உலகின் முக்கிய நன்னீர் ஏரிகளில் பெரும்-பாலானவை இந்நாட்டில் அமைந்துள்ளன. ¨ உலகின் மிகப்பெரிய ஏரியான சுப்பீரியர் ஏரி இந்நாட்டில் உள்ளது. இதன் மற்றொரு எல்லை அமெரிக்காவில் உள்ளது.) ¨ உலகின் மிகப்பெரியதும் புகழ்பெற்றதுமான நயாகரா அருவி கனடாவிற்கும், அமெரிக்கா-விற்கும் இடையில்தான் அமைந்துள்ளது. ¨ ஏராளமான செயல்படும் எரிமலைகள் அவ்வப்போது இந்நாட்டின் இயற்கை அமைப்பை பாதிக்கின்றன. ¨ யூகான் பகுதியில் உள்ள போகன் மலை கனடாவின் உயர்ந்த மலையாகும். ¨ மிகப் பெரிய ஆறுகளான செயிண்ட்லாரன்ஸ், மெக்கன்சி, யூகான், ஃபிரேசர், நெல்சன் ஆகியவை கனடாவில் ஓடும் முக்கிய ஆறுகளாகும். இவை அனைத்தும் உலகின் மிகப்பெரிய 40 ஆறுகளின் பட்டியலில் இடம்பெறுபவை. ¨ கனடா நிலநடுக்கோட்டுக்கு தொலைவில் மேல் பகுதியில் உள்ளதால் பெரும்பாலும் கடும் குளிரான காலநிலையைக் கொண்டது. 7 மாதங்கள் முதல் 11 மாதங்கள் வரை குளிர்காலம் நீடிக்கிறது. ¨ குளிர் காலத்தில் பனிமழை பொழிவதும், இடங்கள் விறைத்துக் காணப்படுவதும் இயல்பாக இருக்கும். இவற்றில் விதிவிலக்காக பசிபிக் கடற்கரை பகுதியில் உள்ள பிரைரிங் கொலம்பியா மிதவெப்ப காலநிலையுடன், மழை பெறும் நிலப்பகுதியாக உள்ளது.
மக்களும் மொழியும்:

¨ நாட்டின் மொத்த மக்கள் தொகை. 2016இன் தோராய கணக்கெடுப்புப்படி 3,60,48,521 பேர். ¨ மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு வழி வந்தவர்கள். மேலும் அய்ரிஷ், ஜெர்மானியர், இத்தாலியர், உக்ரேனியர், சீனர், எஸ்கிமோ, ஹாலந்து நாட்டவர் அதிகம் வசிக்கின்றனர். ¨ ஏறக்குறைய 2,50,000 தமிழர்கள் இங்கு வசிப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோர் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள். ¨ அலுவலக மொழிகளாக ஆங்கிலமும் பிரெஞ்சும் உள்ளன. ¨ 67,3% கிறிஸ்தவர்கள். அதில் பெரும்பகுதி மக்கள் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள். 1960 முதல் மதச்சார்பற்றவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது. தற்போது 23.9% பேர் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று அறிவித்துக் கொண்டுள்ளனர். பிற சமயத்தினர் 7.2% பேர்.
இயற்கைத் தாவரங்கள்:

¨ மேற்குப் பகுதி மலையும் மலைசார்ந்த நிலப்பகுதியுமாக இருப்பதால் மழைக்காடுகள் போன்ற அடர்த்தியான காடுகளைக் கொண்டுள்ளது. ¨ புரைரிங் தாழ்நிலப் பகுதிகள் புல்வெளிகளாக அமைந்துள்ளன. ¨ அதற்கு மேல்பகுதியில் ஊசிஇலைக் காட்டுத் தாவரங்கள் உள்ளன. ¨ மிகக் குளிரான நிலப்பகுதிகளில் தூந்திர தாவரங்கள் உள்ளன.
இயற்கை வளமும் பொருளாதாரமும்:

¨ கனடா பொருளாதார வளர்ச்சியில் உலகில் 11ஆவது இடம் வகிக்கிறது. ¨ இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் சவுதி அரேபியா, வெனிசுலா நாடுகளைத் தொடர்ந்து மூன்றாம் இடத்தை வகிக்கிறது. ¨ வேளாண்மை பொருட்கள் ஏற்றுமதியிலும் கனடா முக்கிய பங்கு வகிக்கிறது. கோதுமை, பார்லி மற்றும் தானியங்கள், கால்நடை போன்றவை பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ¨ இயற்கை தாதுக்களான துத்தநாகம், யுரேனியம், தங்கம், நிக்கல், அலுமினியம், இரும்புத் தாதுக்கள், நிலக்கரி மற்றும் காரியம் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ¨ மரச்சாமான்களும் மரக்கூழ்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ¨ நாட்டின் நாணயம் கனடியன் டாலர்.
வரலாற்றுச் சுவடுகள்:

¨ ஆதிகாலம் முதல் இங்கு வாழ்ந்தவர்கள் செவ்விந்தியர்களும் இனூயிதர்கள் அழைக்கப்பட்ட எஸ்கிமோக்களுமே ஆவார்கள். ¨ கி.பி.1000 வாக்கில் ஸ்காண்டினேவிய நில கண்டுபிடிப்பாளர்கள் இங்கு வந்தனர் என்பது நியூ பவுண்ட்லாந்து தொல்லியல் துறை தடயங்கள் மூலம் உறுதியாகிறது. ¨ 1534இல் பிரெஞ்சுக்காரரான ஜாக்வாஸ் கார்த்தியர் செயிண்ட் வளைகுடா வந்தபின் பிரெஞ்சுக்காரர்கள் கனடாவிற்கு உரிமை கோரினர். 1800களில் பிரெஞ்சு ஆங்கில குடியேற்றங்கள் அதிகமாயின. ¨ 1867இல் ஒன்ராரியோ, கியூபெக், நியூ பிரனஸ்விக், நோவா ஸ்கோஷியா போன்றவை இணைக்கப்பட்டு கனடா கூட்டரசு உருவாக்கப்பட்டது. ¨ 1931இல் பிரிட்டன் தமக்கு இணையான பங்காளி நாடாகக் கனடாவை அங்கீகரித்தது. ¨ 1982இல் கனடா அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. இதன்மூலம் கனடா மீதான பிரிட்டன் பிடி தளர்ந்தது.
அரசமைப்பு முறைகள்:



¨ நாட்டின் தலைவராக பிரிட்டன் அரசி விளங்குகிறார். அவரது பிரதிநிதியாக தலைமை ஆளுநர் பெயரளவிற்கு பணியாற்றுகிறார். ¨ கனடா அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் விளங்குகிறார். ¨ சட்டம் இயற்றும், இரண்டு அவைகளைக் கொண்ட பாராளுமன்றம் இங்குள்ளது. ¨ கனடா 3 நிலை அரசுகளைக் கொண்டது. அவை நடுவண் அரசு, மாகாண அரசுகள், நகராட்சி அமைப்புகள். ¨ உண்மையான கூட்டரசு நாடாகும். கூட்டரசு நிர்வாகம், பாதுகாப்பு, வெளியுறவு போன்றவைத் தவிர அனைத்து முக்கியத் துறைகளும் மாகாண அரசுகள் வசமே உள்ளன. ¨ மக்களவையில் அதிக இடங்கள் பெற்ற கட்சியின் தலைவர் பிரதமர் ஆகிறார். தற்போதைய அரசி இரண்டாம் எலிசபெத். ¨ தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்டுடியவ். ¨ தற்போதைய தலைமை ஆளுநர் டேவிட் ஜான்ஸ்டன். ¨ தலைமை நீதிபதி பீவர்லி மெக்லாச்லின். <
|