அப்துல் கலாம்
Print

அப்துல் கலாம்

(அக்டோபர் -27 பிறந்த நாள்)

கலாம் கலாம் எங்கள் அப்துல் கலாம்
அப்துல் கலாமுக்கு எங்கள் சலாம்

எளிமையின் அடையாளம் எங்கள் கலாம் - பல
ஏற்றங்களைக் கண்டவராம் எங்கள் கலாம்
அரசு பள்ளியிலே படித்த கலாம் - நல்ல
அறிவியலாளராய் இருந்த கலாம்     (கலாம்)

போலிகளை விரும்பாத எங்கள் கலாம் -கொடிய
போலியோவுக்கு மாற்றுக் கால்கள் தந்த கலாம்
வலிமையான குணம் கொண்ட எங்கள் கலாம்     - நாட்டை
வல்லரசாக மாற்றச் சொன்ன புரட்சி கலாம்
(கலாம்)

பாரத ரத்தினமாம் எங்கள் கலாம் - நாட்டை
பார்போற்றச் செய்தவராம் நம்ம கலாம்.
பேசிப் பேசி தன்னம்பிக்கை தந்த கலாம் - இப்ப
பேக்கரும்பில் பெருமையுடன் வாழும் கலாம்
(கலாம்)

Share