Home 2016 ஆகஸ்ட் சும்மா மொக்க போடாதீங்க
வியாழன், 24 செப்டம்பர் 2020
சும்மா மொக்க போடாதீங்க
Print E-mail

சும்மா மொக்க போடாதீங்க

‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து!’

விருந்தினர் முகங்கோணாதபடி வரவேற்கணும்ங்கிறதை வலியுறுத்தத்தான் இந்தக் குறள். இப்பவும் நம்ம வீடுகளில் அப்படித்தான் வரவேற்கறாங்களா? அவ்வளவுக்கு இல்லையின்னாலும் அவங்கவங்களுக்கு எவ்வளவு முடியுமோ அதைச் செய்யறாங்க! அந்தக்காலத்தில இதுக்காகவே திண்ணையெல்லாம் கட்டிவைச்சு, வந்தவங்களுக்கு ச்சும்மா... (சும்மாவேதாங்க) மணக்க மணக்க நீரும், மோரும் குடுப்பாங்களாம். இப்போ, தமிழ்நாட்டு அரசே நீரை விற்கிறது.

சரி விடுங்க, இந்தக் காலத்து நீரு, மோருன்னா என்னத்த சொல்றது? ம்ம்... இந்த இரண்டும் இருந்தாலுமே இப்போ பெரும்பாலும் கொடுக்கிறதென்னமோ, டீ, காஃபிதான்!

டீயோ, காஃபியோ, பாட்டலில் வருகிற நீரோ... எதையுமே அதிகமா பயன்படுத்தினா ஆபத்துதாங்க. அதிலையும் காஃபி அதிகமா குடிக்கக் கூடாதுங்கறாங்க. ஏன்னா? அதில் உடம்புல அஞ்சு நிமிசத்திலே பரவுகிற காஃபின் அப்பிடிங்கற, அதன் சுவைக்கு அடிமைப்படுத்துற நஞ்சு இருக்காம். இது எப்படியிருக்கு? பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் போன்ற சமூகப் புரட்சியாளர்களால் கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்துகிட்டு இருக்கோம்! இப்பப் போய் இதுங்க கிட்டையுமா அடிமையாகணும்? அப்படின்னு தோனுதா? எப்படியோ உணர்ச்சி வந்தா சரி!

காஃபியைப் பற்றிப் பேசினதும் காஃபி ரசிகர்கள் சிலருக்கு  எரிச்சல்! கொட்டாவி! மயக்கம்! உணர்ச்சி வசப்படுதல்! கோபம்! தவிப்பு! தூக்கமின்மை!, ஏக்கம்!, தலைவலி! நடுக்கம்! இதெல்லாம் வருதா? இதெல்லாம் என்னங்கறீங்க? காஃபின் அடிமைத்தனத்துக்கு ஏற்படற அறிகுறிகளாம்! காப்பி சாப்பிடாதவங்களுக்கும் இதுமாதிரி இருக்கத்தானே செய்யுது அப்பிடிங்கறீங்களா?

அடடே! இனிமேலு ‘நான் யாருக்கும், எதுக்கும் அடிமையில்லை’ யின்னு சொல்லிக்க முடியாது போலிருக்கே! அதனால இனிமேல் தலையை வலிச்சா காப்பி குடிக்கறதுக்கு பதிலா, அதை நிறுத்தறது நல்லது! எதை? தலைவலியையா? நீங்க வேற! காப்பி குடிக்கறதைங்க! ஏன்னா? காப்பி குடிக்கறதுனாலதான் தலைவலியே வருதாம்.

அதிலும் முக்கியமா பெண்கள் அதிகமா காப்பி குடிச்சா, குழந்தைகளுக்கு ஊனம் ஏற்படுதாம். ஒரு குவளை (டம்ளர்) காப்பி குடிக்கறது தப்பாய்யா? தப்பாய்யா? அப்பிடின்னு இந்தியன் தாத்தா மாதிரி கேட்கப்படாது. ஆமா, இதுமாதிரியெல்லாம் யாரு? எப்படி கண்டுபுடிக்கறாங்க? வேற யாரு? அறிவியல் அறிஞர்கள்தான். எப்படின்னா? வழக்கம் போல உங்களுக்கும், எங்களுக்கும் தெரிந்த ‘எலி’களை வச்சுத்தான். என்ன! எலிகளை வச்சா? பின்னென்ன ‘புலி’களை வச்சா?

அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு ஒருமுறை அவருடைய அறிவியல் கண்காட்சியில், ஒரு ரோபோவை நிப்பாட்டி அதன் மேலே, ‘என்னைத் தொடாதீர்கள்’ அப்பிடின்னு எழுதி வைச்சதோட இல்லாம, அதைத் தொட்டது எத்தனை பேருன்னு கணக்கு தெரியற மாதிரி அதுல ஒரு புரொக்ராம் பண்ணி வச்சிருந்தாராம்!  அதை பரிசோதனை பண்ணிப்பார்த்தப்போ, மத்ததைக் காட்டிலும் ‘தொடாதே’ன்னு எழுதி வச்ச ரோபோவைத்தான் அதிகமா தொட்டிருந்தாங்களாம். இது மனித இயல்பாம். அந்த மாதிரி நாம சொன்ன இந்த காப்பி மேட்டரும் ஆயிடக்கூடாது. சரியா?

சரி விசயத்துக்கு வருவோம். ‘நோக்கக் குழையாத விருந்து’க்கு இனிமேல் டீ, காப்பி வேணாமுன்னு பெரியார் பிஞ்சுகளை நம்பி முடிவு பண்ணியாச்சு! வேற என்ன குடுக்கலாம்?

மோர் வாங்கலையோ மோரு! தாயே மோர் வாங்கலையோ மோரு!!

“குடுக்கலாமுன்னு சொல்லிட்டு, வாங்கலையோ அப்படிங்கறீங்க!!!”

“எப்படியிருக்கு உடம்பு???”

விடு ஜூட்....

Share