‘மன்னிச்சூ...’
Print

‘மன்னிச்சூ...’

கடந்த இதழில் (2016 ஜூலை) ஏற்பட்ட பிழைகளுக்கு ‘மன்னிச்சூ...’
¨    நமது வடிவமைப்பாளருக்கு அரணாச்சலப் பிரதேசத்தின் ‘குரா’ தோசை ரொம்ப பிடிச்சுடுச்சு போலிருக்கு. அதனால இரண்டு பக்கங்களில் (5, 7 அதையே வச்சுட்டார்.)
¨    11ஆம் பக்கத்தின்‘Can you find this?’ புதிருக்கான விடை Pondicherry.
¨    அப்துல்கலாம் பற்றிய கவிதையில் ஜூலை 27 அன்று அவரது நினைவு நாள் என்று திருத்திப் படிக்கவும்.
¨    பக்கம்.27 -_ இரண்டாம் பத்தியில் கெப்ளர் கண்டுபிடித்த புதிய கோளின் பெயர் 452பி என்று திருத்தி வாசிக்கவும்.

பிழைகளைத் திருத்துங்கள்

பிழைகள் யார் செய்தாலும் திருத்தப்பட வேண்டியவை தானே! ஆகவே பிஞ்சுகளே, நீங்கள் 'பெரியார் பிஞ்சு' இதழைப் படிக்கும்போது ஏதேனும் பிழைகள் கண்ணில் பட்டால், எந்தப் பக்கத்தில் என்ன பிழை என்பதை எங்களுக்குக் கடிதம்/ மின்னஞ்சல் /தொலைப்பேசி வழியாகத் தெரிவிக்கலாம். அடுத்த இதழில் அவற்றிற்கான திருத்தங்கள் வெளியிடப்படும்.

- பொறுப்பாசிரியர், பெரியார் பிஞ்சு

Share