பேசாதன பேசுவோம் | |||
|
மகளை டிராயிங் கிளாஸில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லப் போகும்போது டிராயிங் மிஸ் பரிதாபமாக என்னை பார்த்தார். அவர் வீட்டு ஹாலில் மூன்றாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை ஒருவள் சிறுநீர் கழித்து விட்டாளாம். அதனால் அன்றைய வகுப்பு பாதியில் நின்று விட்டது என்றார். நான் அதுபற்றி அதிகம் பேசாமல் மகளை அழைத்து வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்ததும் “எனக்கு ரெஸ்ட் ரூம் வருது’’ என்று போனாள். “எதுக்குப் பிள்ள இவ்ளோ அடக்குற. அங்க மிஸ்ட கேட்டுட்டு போய்ட்டு வரவேண்டியதுதான’’ “நா ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன். நானே அடக்கி வெச்சிட்டு வீட்ல வந்துதான் இருக்குறேன். அந்த அக்கா தேர்ட் ஸ்டாண்டர்ட் அவ அடக்க முடியாம இருந்துட்டா’’ “ஏன் மிஸ்ட சொல்லிட்டு அவ போகவேண்டியதுதான’’ “இல்ல அந்த அக்காவால....’’ “நிறுத்து, நா கேக்குறதுக்கு ஆன்சர் பண்ணு. மிஸ் பாத்ரூம் போறதுக்கு ஏதாவது சொல்லுவாங்களா?” “இல்லையே ஒண்ணும் சொல்ல மாட்டாங்களே” “இதுக்கு முன்னாடி போயிருக்கியா அவுங்க வீட்ல” “ஆமா போயிருக்கேன்” “அப்ப கேட்டுட்டு போக வேண்டியதுதான” “இல்ல அப்படி கேக்கும் போது மத்த பசங்க எல்லாரும் சிரிப்பாங்க” “பாய்ஸ் மட்டுமா?” “இல்ல கேர்ள்ஸ், பாய்ஸ் எல்லாரும்தான். சிரிப்பாங்க” “எதுக்கு சிரிப்பாங்க” “.....................................” “இல்ல பிள்ள. எதுக்கு சிரிப்பாங்கன்னு கேக்குறேன். அதிகாரம் பண்ணிட்டு உன்ன கேக்கல. கொஞ்சம் யோசிச்சிப் பாரு. எதுக்கு சிரிப்பாங்கன்னு கேட்டேன்; குரலைத் தழைத்தேன்.” “அது சும்மாதான் சிரிப்பாங்க” என்று வெட்கப்பட்டாள். “நா சொல்றேன். யாராவது ஒண்ணுக்கு வருதுன்னு சத்தமா சொன்னா. அந்த ஸ்டூடண்ட் போய் ஒண்ணுக்கு இருக்கிறத மத்த ஸ்டூடண்ஸ் எல்லாம் கற்பனை பண்ணி பாக்குறீங்க சரியா. அதனால மத்தவங்களுக்கு சிரிப்பு வருது.” “அதெல்லாம் தெரியாது” என்றாள் மறுபடியும். “இதப் பாரு நா சொல்றத கேளு. எல்லாருக்கும் குண்டியும் சக்கரையும் இருக்கும். எனக்கு, உனக்கு, உனக்கு பிடிச்ச புலி விஜய்க்கு, அம்மாவுக்கு, தாத்தாவுக்கு, ஆச்சிக்கு, வரும் போது அய்ஸ்கிரீம் வாங்கிட்டு வந்தோமே அந்தக் கடைக்காரருக்கு, உங்க மிஸ்ஸுக்கு எல்லாருக்கும் இருக்கும். எல்லாரும் ஒண்ணுக்கு இருக்கும் போது டிரஸ்ஸ கழட்டிட்டுதான இருப்போம். டிரஸ்ஸ போட்டுட்டு இருந்தா நனைஞ்சிராதா?. இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு?” “இல்ல அப்படி சிரிக்கும்போது ஒருமாதிரி இருக்கும்” “அது மண்டையில மூளையே இல்லாம இருக்கிற ஆளுகளுக்கு வெக்கமா இருக்கும். கொஞ்சம் யோசிச்சிப் பாக்கிற ஆளுகளுக்கு அப்படி இருக்காது. உனக்கு மூளை இருக்கா; இல்லையா?” “இருக்கு” “அப்படின்னா இனிமே ஒண்ணுக்கு வருதுன்னு சொல்றதுக்கு வெக்கப் படவே கூடாது. தைரியமா சொல்லணும். கூச்சப்படக்கூடாது. டிரை பண்ணு இனிமே” “ம்ம்ம்” “நா ஒரு தடவை இப்படி வெக்கப்பட்டுகிட்டு பரிட்சை சரியா எழுதல” என்றேன். “எப்போ, என்ன கிளாஸ் படிக்கும் போது என்று ஆர்வமாக கேட்டாள்.” “ஒம்பாதாங்க் கிளாஸ் படிக்கும் போது. அப்ப அப்பாவுக்கு ஹாஃப் எர்லி எக்சாம். பாதி பரிட்சை எழுதும் போது ஒண்ணுக்கு முட்டுது. சுத்தமா முடியல. கை காலெல்லாம் நடுங்குது. பரிட்சை முக்கால்வாசி எழுதிட்டு வாத்தியார் கிட்ட கொடுத்துட்டேன்” “ம்ம்ம்” “அவரு பாக்குறாரு. நா கொஞ்சம் எழுதல. கோவத்துல கேக்குறாரு எல மனப்பாடப் பாட்டு எழுதலியோன்னாரு.” “அப்பா சின்னப் பையன்தானே குரல் எல்லாம் நடுங்குது. பயந்துகிட்டே இல்ல சார் அப்படின்னு சொல்றேன். அவரு ஏன் படிக்கலையான்னு அதட்டுறாரு. நா இல்ல சார் படிச்சிட்டேன். ஆனா அவசரமா ஒன் பாத்ரூம் வருதுன்னேன்.” “ம்ம்ம்” “அவரு பேசுறத அப்படி நிறுத்திட்டு இப்ப உடனே போயிட்டு இங்க வரணும்னாரு. நா வேகமா ஓடிப்போய் ஒண்ணுக்கு இருந்தேன். நிம்மதியா ஆனேன். திரும்ப வந்தேன்” “ம்ம்ம்” “அவரு பேப்பரக் குடுத்து எழுதுன்னார். நா வாங்கி எழுதாம இருக்கிற ஆன்சர் எல்லாம் பட்பட்டுன்னு எழுதிட்டேன். பேப்பர அவருகிட்ட குடுத்தேன். ஒடனே அவரு என்ன பண்ணுணாரு தெரியுமா? “என்னது” “நீ என் பக்கத்துல வா” “வந்தாள்.” “அப்பாவ இப்படி குனிய வெச்சி அவரு கையால முதுகல மீடியமா இரண்டு அடி போட்டார். போட்டுட்டு சொன்னார், ஒண்ணுக்கு வந்தாக்க வாயத் தொறந்து சொல்லணும் கேட்டியா. இப்படி பரிச்ச பேப்பர பாதில குடுத்தா வௌங்க முடியாது கேட்டியா. வாயைத் தொறந்து பேசணும் கேட்டியா அப்படின்னு அடிச்சார்.” “சிரித்தாள்.” “இப்ப நா தான் அந்த வாத்தியார். உன் முதுகுல போடப் போறேன் ஒண்ணுக்கு வந்தா வாயத் தொறந்து சொல்லணும் கேட்டியா.” “கிட்னி சட்னியாயிரும் கேட்டியா?” “அதுல நா ஒண்ணாங்க் கிளாஸ் பொண்ணு அடக்கிட்டேன்னு ஒரு பெருமை வேற கேட்டியா என்று செல்லமாய் முதுகில் ரெண்டு போடப் போகவும்” “தன்னை விடுவித்துக் கொண்டு
|