பிஞ்சுகள் கொண்டாடிய பெரியார் பிறந்தநாள் விழா
Print

தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கும் பல நாடுகளில் பெரியார் தாத்தாவின் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன. பல இடங்களிலும் பிஞ்சுகள் முன்னின்று அவர்களாகவே விழா கொண்டாடியுள்ளனர். அவற்றுள் ஒரு சில உங்கள் பார்வைக்காக...

சிவகங்கை கலைமகள் ஓவியப் பள்ளியில் செப்டம்பர் 17, 18 ஆகிய நாள்களில் ஓவியர் முத்துக்கிருஷ்ணன் முயற்சியில் மாணவர்கள் பலர் தந்தை பெரியாரின் படத்தை ஓவியமாகத் தீட்டும் போட்டியில் கலந்துகொண்டனர். விழாவில் வழக்குரைஞர் ச.இன்பலாதன், உ.சுப்பையா, அ.மகேந்திரராசன் மேலும் பலர் பங்கேற்று பரிசுகள் வழங்கினர்.

காரைக்குடி பெரியார் பிஞ்சு புத்தன் இல்லத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். பெரியார் பற்றிய கவிதைகளை ஒப்பித்தவர்களுக்கு பவானி என்னாரெசு மணியம்மை, டார்வின் தமிழ் ஆகியோர் ஏற்பாட்டில் சிறப்புப் போட்டியாக புதையல் வேட்டை போட்டி நடத்தப்பட்டது.

விழா நிகழ்வில் கலை அறப்பேரவை கலைவாணனின் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சையைச் சேர்ந்த பெரியார் பிஞ்சு ஜெ.ஜெ.கவினும், ஜெ.ஜெ.காவியாவும் 17.9.2016 அன்று தங்கள் வீட்டு வாசலில் தந்தை பெரியார் படத்தை வைத்து மாலையிட்டு, நண்பர்களுக்கெல்லாம் இனிப்பு வழங்கிக் கொண்டாடியிருக்கிறார்கள். படத்தில் அவர்களின் நண்பர்கள் லோகேஷ், அஜீத் மற்றும் கவிஞர் துரை.சித்தார்த்தன் ஆகியோர்.

Share