வண்ணங்கள்
Print

காலை ஒளியில் செந்நிறம்

மாலை வெய்யில் மஞ்சளாய்

சோலைப் பூக்கள் பன்னிறம்

சுவைக்கும் வண்டு கருநிறம்

 

நீல மேகம் கருமையாய்

நிறத்தை மாற்றும் வேளையில்

கால மழையும் பொழியுது

கழனி பச்சை யாகுது

 

உடலின் வண்ணம் மாறினும்

உதிரம் மட்டும் சிவப்புதான்

உடல் கறுத்த தாயிடம்

ஊறும் பாலும் வெள்ளைதான்

 

சேர்ந்து படிக்கும் மாணவர்

சிவப்பில், கறுப்பில் இருக்கலாம்

தேர்ந்த கல்வி ஒன்றுதான்

செம்மையாக்கும் வாழ்க்கையை

 

வானின் ஏழு வண்ணங்கள்

வளைந்த வில்லில் இணைதல்போல்

மேனி வண்ணம் மாறினும்

மாந்தர் ஒன்று கூடுவோம்!

சி.விநாயகமூர்த்தி,
திருவில்லிபுத்தூர்

Share