Home 2017 மே தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி!
சனி, 10 ஜூன் 2023
தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி!
Print E-mail

தர்ப்பூசணி நல்ல தர்ப்பூசணி _ மக்கள்

தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி

வறட்சி யான காலத்தில் _ குளிர்ச்சியை

வாரி வழங்கும் தர்ப்பூசணி!

 

வீட்டில் விரும்பி வளர்த்திடலாம் _ அதனைத்

தோட்ட மெல்லாம் பயிரிடலாம்

நாட்டில் நல்ல குளிர்பானம் _ சிறுவர்

நாடிக் குடிக்கும் நற்பானம்!

 

பச்சை நிறமாம் அதன்மேனி _ உள்ளம்

பவளச் சிவப்பாம் பழவகையே

உச்சி குளிர உவகைதரும் _ அது

உடலைக் காக்கும் பழரசமே!

 

ஏழை எளியோர் எல்லோரும் _ கோடையில்

எளிதாய் வாங்கிச் சுவைத்திடலாம்

வேகும் வெய்யிலைத் தகர்த்திடலாம் _ நோயை

வரவி டாமல் தடுத்திடலாம்!

 

தர்ப்பூசணி நல்ல தர்ப்பூசணி _ மக்கள்

தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி

வறட்சி யான காலத்தில் _ குளிர்ச்சியை

வாரி வழங்கும் தர்ப்பூசணி!

- கவிஞர் அழகுதாசன், கோவை

Share