
‘பென்சில்’ தினமும் எழுதியே பெரிதும் நமக்கு உதவியே தன்னைச் சுருக்கித் தேய்ந்துமே தகவல் என்ன சொல்லுது?
நன்கு ‘ரப்பர்’ பிழையினை நாமும் அழிக்க உதவியே சின்ன தாகத் தேய்ந்துமே சேதி என்ன சொல்லுது?
என்றும் ‘மெழுகுத் திரி’யுமே இருளை அகற்ற உதவியே நின்று எரிந்து தேய்ந்துமே நீதி என்ன சொல்லுது?
துண்டுச் ‘சோப்பு’ம் துணியினைத் தூய்மை யாக்க உதவியே பண்டு தொட்டுத் தேய்ந்துமே பாடம் என்ன சொல்லுது?
என்னை உன்னைப் பிறருக்காய் ஈந்து நாளும் உதவியே மண்ணும் உழைப்பில் தேய்ந்துமே மாண்பு தேடச் சொல்லுது!
|