தந்தையைப் போற்றுவோம்!
Print

அறிவைப் புகட்டும் தந்தையினை
ஆண்டு முழுதும் போற்றிடினும்
குறிப்பாய் ஒருநாள் சிறப்பாக
கொண்டா டுதல்தான் தந்தையர்நாள்!

தம்மின் தமது மக்களெலாம்
தக்க அறிவைப் பெறுதற்கு
இம்மண் மீது உழைப்பதிலே
என்றும் தந்தை உயர்ந்தவரே!

ஆன்றோர் அவையில் தம்மகனை
அமரச் செய்யும் முயற்சியிலும்
சான்றோன் ஆக்க முயல்வதிலும்
சளைக்கா துழைப்பர் தந்தையரே!

தமிழின் மண்ணில் பிறந்தோரைத்
தனது மக்கள் என்றுணர்ந்து
தமிழர்க் கறிவை ஊட்டிட்டார்
தந்தை பெரியார் அறிந்திடுவீர்!

உண்மை அறிவைத் தமிழ்மக்கள்
உணரச் செய்தப் பெரியாரை
எண்ணித் தந்தை யர்நாளில்
எல்லோ ரும்நாம் போற்றிடுவோம்!


கே.பி .பத்மநாபன்,
சிங்கால்லுர்

Share