Home 2017 செப்டம்பர் கொள்கைக் கோமான்கள்!
செவ்வாய், 22 செப்டம்பர் 2020
கொள்கைக் கோமான்கள்!
Print E-mail

ஈரோடு காஞ்சிபுரம்

இரண்டும்தெரிந்த ஊராம் - பெரியார்

ஈ.வெ.ரா. அறிஞர்அண்ணா

எவரும் அறிந்த பேராம்!

 

தேரோடும் திருவாரூர்

திருமண்தந்த சீராம் - கலைஞர்

தீந்தமிழைச் செம்மொழியாய்த்

திகழவைத்த மேராம்!

 

வேரோடு தீண்டாமை

வீழச்செய்த பேராம் - அந்த

வெற்றிப்படைத் தளபதிநம்

வீரமணி யாராம்!

 

போராடி மட¬யினைப்

போக்கஉழைத் தோராம் - வந்து

புரட்சிக்கொடி பிடித்தவர்நம்

புதுவைக் கவிஞர் ஏறாம்!

 

ஊராரின் பகுத்தறிவை

ஊட்டிவளர்த் தாராம் - இந்த

உலகின்ஜாதி மதக்கறையை

ஓட்டிஒழித் தாராம்!

 

கூரான சிந்தனைமேற்

கொண்டகொள்கை யோராம் - அந்தக்

கோமான்கள் கொள்கையைமேற்

கொள்ளல்நம்கைம் மாறாம்!

- தளவை இளங்குமரன், இலஞ்சி

Share