Home 2017 அக்டோபர் சிறு கை அளாவிய ஜுவல்
ஞாயிறு, 09 ஆகஸ்ட் 2020
சிறு கை அளாவிய ஜுவல்
Print E-mail

சின்னக் குழந்தைகளின் கிறுக்கல்களைக் கண்டிப்போர் உண்டு...

கழுத்திலேயே அணிவோர் உண்டா? உண்டு என்கிறது அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலம் சார்லட்வில் நகரில் உள்ள பார்மியா டிசைன் நிறுவனம். நீங்கள் படத்தில் கண்ட குழந்தைகளின் கிறுக்கல் ஓவியங்களை அழகான நகைகளாக்கி அணிந்துகொள்வதற்கு வசதியாக உருவாக்குகிறது இந்த நிறுவனம். எந்த அணிகலனும் தேவையில்லை என்பது நம் கருத்து. இது அணிகலன் என்பதில் அல்ல சிறப்பு. குழந்தைகளின் படைப்பு முயற்சிக்கான அங்கீகாரம்... என்ன கொஞ்சம் காஸ்ட்லி அங்கீகாரம்!

-பிஞ்சண்ணா

*ஜுவல் (Jewel) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நகை என்று பொருள்

Share