செய்து அசத்தலாம் | |||
|
தேவைப்படும் பொருள்கள்: 1. சதுர வடிவ சிறிது தடிமனான வெளிர் நீல பேப்பர் ஒன்று. 2. கருப்பு நிற ஸ்கெட்ச் பென். செய்முறை: 1. சதுர வடிவ காகிதத்தைத் திருப்பி வைத்து, படம் 1_இல் காட்டியுள்ளதைப் போல கோடிட்ட இடத்தை மடித்துக் கொள்ளவும். 2. படம் 2_இல் காட்டியுள்ளதைப் போல மீண்டும் ஒரு மடிப்பு மடிக்கவும். 3. இப்பொழுது படம் 3_இல் காட்டியுள்ளதைப் போல அம்புக்குறியிட்ட இடத்தில் சரிபாதியாக மடிக்கவும். 4. பிறகு அதைத் திருப்பி வைத்து கோடிட்ட இடத்தை மேல்புறமாக மடிக்கவும். 5. பிறகு படம் 5_இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை முன்புறமாக மடித்துக் கொள்ளவும். 6. இப்பொழுது படம் 6_இல் காட்டியபடி அம்புக் குறியிட்டப் பகுதிகளை சிறிது மடித்துவிட்டுக் கொள்ளவும். (லேசாக மடிந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்) இப்பொழுது அன்னம் தயார். அதற்கு ஸ்கெட்ச் பென் உதவியோடு கண்ணை வரைந்துகொள்ளவும். அழகிய அன்னப் பறவை வந்தாயிற்று. செய்து அசத்துங்கள். - வாசன்
|