உதவுதல் அழகு!
Print

உதவுதல் வாழ்க்கைக்கு அழகு - அதை
ஒவ்வொரு நாளுமே பழகு!
முதலுதவி என்பதுவும் ஒன்று - அதை
முயற்சித்தால் கற்றிடலாம் நன்று!

ஆபத்துக் காலத்தில் தேவை - சற்று
ஆராய்ந்தால் அதுசிறந்த சேவை.
நீபார்த்துச் செய்கின்ற உதவி - உனக்கு
நிச்சயமாய் உயர்வளிக்கும் பதவி!

விரிவானின் உதவிதானே மழை - இந்த
மண்செய்யும் உதவிக்கென்ன விலை.
அறிவாளர் உதவி நல்ல கல்வி - இதை
அகத்தில் என்றென்றும் கொள்நீ!

கதிரவனின் உதவியாலே விடியும் - நம்பு
கரம்சேர்ந்தால் முடியாததும் முடியும்.
மதியுள்ளோர் மனதினிலே தங்கும் - பிறர்
வாழ்வெல்லாம் வளமாகிப் பொங்கும்!


- அருப்புக்கோட்டை செல்வம்

Share