Home 2017 நவம்பர் ஜப்பான்
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020
ஜப்பான்
Print E-mail

I.             அமைவிடமும் எல்லைகளும்:-

¨           ஜப்பான் நாடு ஆசியக் கண்டத்தில் பசிபிக் பெருங்கடலின் மேற்கு புறமாக அமைந்துள்ளது.

¨           சீனா, வடகொரியா, தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் ஜப்பானின் அண்டை நாடுகள் ஆகும்.

¨           ஜப்பான் 6,852 தீவுகளை கொண்ட நாடு ஆகும்.

¨           அகலக்கோடு 240_460 வ, நெடுங்கோடு 1220_1460கி

¨           இதன் மொத்த பரப்பளவு 377,972 சதுர கி.மீ.

¨           127 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட உலகின் 11ஆவது நாடு.

¨           இதன் தலைநகரம் டோக்கியோ.

II.   இயற்கை அமைப்பும் காலநிலையும்:-

¨           நாட்டில் 73 சதவீதம் காடுகளும், மலைகளும், எரிமலைகளும் இருப்பதால் வேளாண்மை, தொழில், குடியிருப்புகளுக்கு உதவாத இடமாக உள்ளது.

¨           இங்கு அபாயகரமான, இயங்கும் எரிமலைகள் 108 உள்ளன.

¨           ஜப்பானில் ஒரே நேரத்தில் வெவ்வேறு காலநிலை நிலவும். ஒரு பகுதியில் கடும் வெயிலும், ஒரு பகுதியில் கடும் மழையும், ஒரு பகுதியில் கடும் பனிப்பொழிவும் நிலவும்.

¨           நாட்டின் உயர்ந்த மலைச்சிகரம் ஃபூஜி மலை 3,776 மீட்டர்.

¨           பெரிய எரிமலை சின்மோடேக் எரிமலை.

III.             பொருளாதாரம்:-

¨           பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

¨           ஏற்றுமதி, இறக்குமதியில் உலகின் நான்காவது பெரிய நாடு.

¨           கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் துறையில் முதன்மையான நாடு.

¨           விவசாய நிலங்கள் அதிகம் இல்லாததால் அடுக்கு மாடிகளிலும், கப்பலிலும் விவசாயம் செய்யும் நாடு.

¨           தொழில் துறைக்குத் தேவைப்படும் எந்த கனிம வளங்களும் இல்லாத நாடு.

¨           பெரும் அளவு இறக்குமதியை நம்பியுள்ள நாடு.

¨           தரமான பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடு.

¨           நாட்டின் நாணயம் யென்(Yen) என்று அழைக்கப்படுகிறது.

IV.              மொழியும் மக்களும்:-

¨           98.5% மக்கள் ஜப்பானியர்களே மீதமுள்ளவர்கள் கொரியா, சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து குடியேறியவர்கள்.

¨           தேசிய மொழி ஜப்பானீஸ்.

¨           அலுவலக மொழியாக 11 மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

¨           நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீத மக்கள் டோக்கியோவில் வாழ்கிறார்கள்.

¨           உலகிலேயே மக்கள் அடர்த்தி மிகுந்த நாடு.

¨           இங்கு பெருமளவு சின்தோ மதமும், புத்த மதமும் பின்பற்றப்படுகின்றன. சிறுபான்மை யினரான கிறித்துவ மத மக்களும் உள்ளனர்.

¨           உலகிலேயே அதிக கல்வியறிவு, அதிக பட்டதாரிகளைக் கொண்ட நாடு.

¨           உலகிலேயே வாழ்நாள் சராசரி அதாவது 100 வயதுக்குமேல் அதிகம்பேர் வாழும் நாடு.

V.    வரலாற்றுக் குறிப்பு:-

¨           முற்காலம் தொட்டே பாரம்பரியமான மன்னராட்சியைக் கொண்ட நாடு.

¨           1889 முதல் 1946 வரை ‘மா யப்பான் பேரரசு’ என்பது நாட்டின் சட்டப்படியான பெயராக இருந்தது.

¨           நிகோன் கொகு, நிப்போன் கொகு என்றும் அழைக்கப்பட்டது.

¨           ஜப்பானின் சுதந்திர தினம் கி.மு.660 பிப்ரவரி 11.

VI.              அரசுமுறை:-

¨           ஜப்பான் அதன் பேரரசருக்கு மிகவும் குறைவான அதிகாரங்களையே வழங்கும். பேரரசர் சடங்குசார் தலைவரே ஆவார்.

¨           பேரரசரால் நியமிக்கப்படும் பிரதம அமைச்சரே அரசின் தலைவர் ஆவார்.

¨           20 வயதிற்கு மேல் வாக்குரிமை உண்டு.

¨           45 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

¨           பாராளுமன்றத்தின் பெயர் தேசிய டயெட். இது இரண்டு அவைகளைக் கொண்டதாகும்.

VII.        மேலும் சில தகவல்கள்:-

¨           ஜப்பான் (Ring of Fire) பசிபிக் தீவில் உள்ள எரிமலை வளையத்தில் அமைந்துள்ளது.

¨           ஜப்பானின் புல்லட் ரயில்கள் மிகவும் பிரபலம். இவை நேரம் தவறாமைக்கு பெயர் பெற்றவை.

¨           173 வானூர்தி நிலையங்கள் உள்ளன.

¨           ஆசியாவின் பெரிய மற்றும் பரபரப்பான வானூர்தி நிலையமான டோக்கியோ ஹனீடா வானூர்தி நிலையம் உள்ளது.

¨           யோக்கோ காமா, நகோயா போன்ற பெரிய துறைமுகங்கள் உள்ளன.

க்ஷிமிமிமி.  விளையாட்டு:-

பாரம்பரிய விளையாட்டு சுமோ.

¨           தற்காப்புக் கலைகள் ஜூடோ, கராத்தே வழக்கத்தில் உள்ளன.

¨           இங்கு கோல்ப் விளையாட்டு புகழ்பெற்ற விளையாட்டு.

¨           கால்பந்து விளையாட்டு பெரிதும் ஈடுபாட்டோடு விளையாடப்படுகிறது.

மிஙீ     அரிய தகவல்கள்:-

¨           1945இல் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசியது.

¨           ஜப்பானின் இயற்கைச் சூழலில் மட்டும் 90,000 வகை உயிரினங்கள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

¨           உலகின் 10 சதவீத எரிமலைகள் ஜப்பானில் உள்ளது.

¨           ஆண்டுக்கு 1500 நில நடுக்கங்களுக்கு மேல் ஏற்படுகின்றன. உலகின் பூகம்பத் தொழிற்சாலை என்றும் அழைக்கப்படுகிறது.

¨           ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகம் ஆசியாவின் முதன்மையான பல்கலைக் கழகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

¨           காகிதங்களை மடித்து சிற்பங்கள் செய்யும் “ஓரிகாமி’’ கலை பிரபலமானது.

¨           பெரிய பெரிய மரங்களை சிறிய உருவமாக தொட்டியில் வளர்க்கும் “பொன்சாய்’’ முறை புகழ்மிக்கது.

¨           உணவு வகையில் “சுஷி” உணவு பிரபலம்.

¨           ஜப்பானில் குழந்தைகளைவிட செல்லப் பிராணிகளே அதிகம்.

¨           பெரும்பாலான தெருக்களுக்கு பெயர் கிடையாது.

¨           ஜப்பானில் நான்கு பெரிய தீவுகளான ஹொக்கையோ, ஹொன் ஷீ, ஷிகொக்கு, கியூஷி போன்றவைகளைத் தவிர மீதம் உள்ளவைகள் மிகச் சிறிய குட்டித் தீவுகளே.<

Share