வண்ணத்துப்பூச்சி
Print

பொன்வண்டின் சகோதரி

வானவில் தீட்டிய ஓவியம்

இயற்கையின் சத்தமில்லா விமானம்

காற்றின் விசிறி

எழிலின் எடுத்துக்காட்டு

இன்பத்தின் குதியாட்டம்

காற்றில் நீச்சல் கற்ற கலர்க்குழந்தை

திக்குமுக்காட வைக்கும் பூக்கலவை

பூக்களுக்கு முத்தமிடும் புல்லாங்குழல்

மௌனத்தின் சத்தப் பாட்டு

பிரபஞ்சம் தெளித்த வண்ணத்தண்ணீர்

எவரும் கண்டுபிடிக்க முடியா

வண்ணக்கலவை

சிறகு விரிக்கையில் - என்

இதயத்தின் நிழற்படம்

பல வண்ணச் சேலைக்காரி

மூளைச்சலவை செய்யும் மருத்துவம்

மொத்தத்தில் நீ ஒரு மகிழ்ச்சிப் பறவை!

Share