Home 2017 டிசம்பர் பலன் எதிர்பார்த்து..
செவ்வாய், 20 அக்டோபர் 2020
பலன் எதிர்பார்த்து..
Print E-mail

=             கூடு கட்டத் தெரியாத...

குயில் நல்லாப் பாடுது!

மகசூல் பண்ணத் தெரியாத...

மண் புழு உரத்தை சேர்க்குது!

 

=             கரை யேறத் தெரியாம...

குளமும் தளும்பி நிக்குது!

செலவழிக்க தெரியாம...

தேனீ கூடு கட்டுது!

 

=             கூலி ஏதும் வாங்காமல்...

காகம் சுத்தம் செய்யுது!

பேசக் கூட தெரியாத...

நாயும் நன்றிக் காட்டுது!

 

=             வேட்டையாடத் தெரியாம...

வான(ம்) வில்லை வளைக்குது!

மதிப்பு ஏதும் தெரியாம..

மரங்கள் கனியைக் கொடுக்குது!

 

=             கணக்கு பார்க்கத் தெரியாம...

கதிரவன் ஒளியைப் பாய்ச்சுது!

கண்ணுக்கென்றும் தெரியாம...

காற்றும் சேவை ஆற்றுது!

 

=             மறைச்சு வைக்கத் தெரியாம...

மழையும் கொட்டித் தீர்க்குது!

எல்லாம் தெரிந்த மானுடம் - பலனை

எதிர்பார்த்துத் திட்டம் போடுது!<

Share