Home 2018 ஜனவரி காற்றே காற்றே!
சனி, 21 ஏப்ரல் 2018
காற்றே காற்றே!
Print E-mail

காற்றே காற்றே

கொஞ்சம் நில்லு நில்லு! - எங்கள்...

காதில் வந்து

கொஞ்சம் சொல்லு, சொல்லு!

கடவுள் என்றால் என்ன வென்று நீ

சொல்லு சொல்லு!

அதைக் கண்டவர்கள் யார்? - கண்டு

சொன்னவர்கள் யார்? சொல்லு சொல்லு

அதைச் சொன்னபின் - உன்

பாதையில் செல்லு செல்லு!

(காற்றே...)

உருவமில்லை என்று

சொன்னவர் யாரு? - அதற்கு

ஆயிரம் உருவங்களை

தந்தவர் யாரு?

கடவுளைப் படைத்தவன்

சிற்பி! சிற்பி!! - அதைக்

காண்போரிடத்திலெல்லாம்

கற்பி! கற்பி!!

(காற்றே...)

மடஉலகே மதவுலகென்று

மத்தளத்தைத் தட்டு, தட்டு!

மண்புழுவாய் நெளிவோன்

மண்டையில் கொஞ்சம் குட்டு, குட்டு!

பகுத்தறிவுப் பாதையை நீ

காட்டு, காட்டு! - அந்த

ஈரோட்டுச் சாலையில்

தேர் ஓட்டு, ஓட்டு!

(காற்றே...)

- கவிஞர் கலி.பூங்குன்றன்

Share