இடி வாழை மரத்தில் விழுந்தால் தங்கமாகுமா.?
Print

 

y16.jpg - 458.04 Kb

 

படித்தவர்கள்கூட இடி விழும் என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.

‘மேகம் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும்போது, அதில் ஒரு பகுதி சிதறிவிழும். அதுவே இடி’ என்றும் நம்புகின்றனர். அவ்வாறு விழும் இடி வாழை மரத்தில் விழுந்தால் தங்கமாக அல்லது இரும்பாக மாறும் என்றும் நம்புகின்றனர். இவை முற்றிலும் தவறான நம்பிக்கைகள்; உண்மைக்கு மாறான கருத்துக்கள்.

இடி எப்படி உருவாகிறது?

மின்னூட்டப்பட்ட நீர்த் திவலையின் தொகுப்புதான் மேகம். மேகத்தின் மேற்பகுதியில் எதிர் மின்னூட்டம் (_-) காணப்படும். கீழ்ப்பகுதியில் நேர் மின்னூட்டம் (+) காணப்படும்.

சில நேரங்களில் நேர்மின்னூட்டமும், எதிர் மின்னூட்டமும் கலந்து காணப்படும்.

மேகங்களில் உள்ள நேர்மின்னூட்டங்கள், பூமியில் பாய ஏதாவது ஓர் ஊடகத்தை எதிர்நோக்கியிருக்கும். பொருத்தமான ஊடகம் கிடைத்தவுடன் அதன் வழி பூமியில் பாய்ந்து விடும்.

குறிப்பாக உயரமான மரங்கள், உயரமான கட்டடம் ஆகியவற்றின் வழி, அந்த நேர்மின்னூட்டம் பூமியை வந்தடையும். அப்போது மனிதர்களோ, விலங்குகளோ குறுக்கிட்டால், அவர்கள் அல்லது அவற்றின் வழி அந்த நேர் மின்னூட்டம் கடந்து பூமியை அடையும்.

ஒரு மேகத்தில் உள்ள மின்னூட்டங்கள் (நேர் (+) அல்லது எதிர் (_-) வானத்தில் மிதந்து செல்லும் போது ஒன்றோடொன்று மோதுவதால் ஏற்படும் ஒளியே மின்னல் ஆகும். அப்போது எழும் ஓசையே இடி ஓசை ஆகும்.

இடியினால் ஏற்படும் ஓசை நெட்டலையாகி, அதில் ஏற்படும் குறுக்கும் நெடுக்கும் இவற்றின் விளைவாய் தொடர் இடியோசைக் கேட்கிறது.

அவ்வாறு பூமியை வந்தடையும் நேர் மின்னூட்டம் உயிர்களுக்கோ, கட்டடங்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் வழக்கத்தில் அதனை ‘இடிதாக்கியது’ என்று கூறுகிறோம். அதனால்தான் மழைக் காலங்களில் மரத்தடியில் நிற்கக் கூடாது என்கின்றனர்.

அதாவது மின்சாரத் தாக்குதலே இடி எனப்படுவது ஆகும். மின்சாரத்தில் அகப்பட்டவர் போல இடியில் அகப்பட்டவர் கருகிப் போகிறார்.

இடிதாங்கி: இடிதாங்கியில் உள்ள கூர்முனையில் எதிர் மின்னூட்டம் காற்றில் கசிந்து மேகத்தில் உள்ள நேர் மின்னூட்டத்துடன் இணைந்து சமநிலைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இடியின் பாதிப்பு (மின்தாக்குதலின் பாதிப்பு) கட்டடத்திற்கு வராது.

நேர் மின்னூட்டம் செல்லும்போது, அவை ஒன்று சேர்ந்து மின்னழுத்தம் அதிகமாகி கட்டடத்தை இடித்து விடும். இடிதாங்கி இருந்தால் இந்த அழுத்தம் மேற்கண்டவாறு சமநிலைப் படுத்தப்பட்டு இடியின் தாக்குதல் தவிர்க்கப்படுகிறது. கட்டடம் பாதுகாக்கப்படுகிறது.

ஆக, இடி என்பது இயற்கையில் வெளிப்படும்  மின்சாரத் தாக்குதல் ஆகும். மின்சாரத்திடம் நாம் எந்த அளவிற்கு எச்சரிக்சையாக இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு மின்னல், இடியிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மழைக் காலங்களில் எக்காரணத்தைக் கொண்டும் மரத்தடியில் நிற்கக் கூடாது.

மழைக் காலங்களில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு  வரும் மின் இணைப்பு, கேபிள் இணைப்பு இரண்டையும் பிடுங்கிவிட வேண்டும். முடிந்த மட்டும் மின்னல், இடியின்போது தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தி மின்சார இணைப்பைத் துண்டித்துவிட வேண்டும். வழக்கமாக இரவு படுக்கும்முன் இரண்டையும் பிடுங்கி விடுதல் நலமே!

நவமணிகளில் ஒன்றாகக் கருதப்படுவது பவளம்.

பவளம் என்பது பாறையில் வெட்டி எடுக்கப்படுவது என்ற கருத்து தவறாகும்.

பவளம் அல்லது பவழம் (நீஷீக்ஷீணீறீ) என்பது ஒருவகை கடல் வாழ் உயிரினமாகும். இவை நிடேரியா (சிஸீவீபீணீக்ஷீவீணீ) தொகுதியைச் சேர்ந்த, அந்தோசோவா (கிஸீtலீஷீக்ஷ்ஷீணீ) வகுப்பைச் சேர்ந்தவையாகும். குழியுடலிகளைச் சேர்ந்த இவை சல்லி வேர்கள் போன்ற ஏராளமான கால்களைக் கொண்டவை. நெருக்கமாக அடுக்கப்பட்ட குடியிருப்புகள் போன்ற தோற்றத்தைக் காட்டும் சேர்ந்திருப்பு / சமூக அமைப்பைக் கொண்டிருக்கும்.  கடல் நீரில் உள்ள பல்வகை உப்புகளைப் பெருமளவில் பிரித்தெடுத்துத் தங்கள் உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும் இயல்புடையவை. பவளப் பூச்சிகள் பெரும்பாலும் வெப்ப நீர்க்கடல்களில் காணப்படுகின்றன. இதனால் வெப்பமண்டல கடல்களில் பவளப் பாறைகள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இவை கடல் நீரிலுள்ள சுண்ணாம்புச் சத்தை உறிஞ்சி இவை கால்சியம் கார்பனேட்டைச் சுரப்பதன் மூலம், கடினமான அடிப்படை ஒன்றைத் தோற்றுவிக்கும். இவை பல கிளைகளைக் கொண்ட மரங்களை ஒத்திருக்கும். இவற்றைப் பவளக்கொடிகள் என்று கூறுவர். இந்தப் பவளக்கொடித் திட்டுகள் சேர்ந்து இறுகிப் பாறையாகி தீவுகள் ஆகின்றன. இவற்றைப் பவளத்தீவு என்பர். <

Share