Home 2018 ஏப்ரல் என் நட்பு
செவ்வாய், 27 அக்டோபர் 2020
என் நட்பு
Print E-mail

என் நட்பு

நன்றொன்றை தவறவிட்டால்

நானிலத்தில் பலனில்லை

நட்பொன்றை இழந்துவிட்டால்

நாளிலொன்று பயனில்லை...

நல்ல நண்பனைத்

தேடுவதைவிட

நீ நல்ல

நண்பனாக இரு

கட்டாயம்

உன்னைத் தேடி

நல்ல நட்பு அமையும்

- சோனா

 

நட்பு

அன்பு மிகுந்தது

ஆற்றல் நிறைந்தது

இன்னல் களைவது

ஈரம் கசிவது

உண்மை உரைப்பது

ஊக்கம் அளிப்பது

எண்ணம் உயர்ந்தது

ஏற்றி உவப்பது

ஐயம் அகற்றுவது

ஒழுக்கம் உடையது

ஓதி உணர்வது

ஔடதம் போன்றது

அஃதே நட்பு.

- இர.அறிவரசி,

7ஆம் வகுப்பு, பாரத் மாண்டிச்சோரி பதின்ம மேல்நிலைப்பள்ளி, இலஞ்சி - 627 805.

 



 

உன் மனம்

வலிக்கும்போது

சிரி,

பிறர் மனம்

வலிக்கும்போது

சிரிக்க வை!

- சார்லி சாப்ளின்

Share