கிரேக்கக் குடியரசு | ||
|
அமைவிடமும் எல்லைகளும் கிரேக்க நாடு அய்ரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளன. ஏகியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே யவனக் கடல் உள்ளது கிழக்கே மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் பற்பல சிறுசிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன. தலைநகரம் ஏதென்ஸ் ஆகும். கிரேக்க நாடு தெற்கு அய்ரோப்பாவில் அமைந்துள்ள ஒரு வளமான நாடாகும். பரப்பளவு 1,31,957 கி.மீ.2 (50,949 சதுர மைல்) மொழியும் மக்களும் ஆட்சி, அலுவல் மொழியாக கிரீக் உள்ளது. மக்கள் கிரேக்கர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கிரீக் மொழியைத் தவிர்த்து துருக்கி, பல்கேரியன், ரோமா போன்ற மொழிகள் பேசப்படுகின்றன. பெரும்பான்மையான மக்களாக ஈஸ்டர்ன் ஆர்த்தோடோக்ஸி மக்கள் (90%) உள்ளனர். மற்ற கிறித்துவர்கள் (3%), இஸ்லாம் (2%), மற்ற மதத்தவர் (1%) உள்ளனர். 4% மக்கள் எந்த மதத்தையும் சாராத பகுத்தறிவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 12 மில்லியன். பொருளாதாரம் நாணயம் யூரோ 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட அய்ரோப்பிய யூனியனின் அமைப்பில் பொருளாதாரத்தில் 15ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதாரத்தில் உலக அளவில் 40ஆம் இடத்தில் உள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவு பெற்றுள்ள நாடு. நாட்டின் மொத்த வருமானத்தில் 85% சேவை நிறுவனங்கள் மூலமும் 12% தொழிற்சாலை மூலமாகவும் 3%, விவசாயம் மூலமாகவும் வருவாய் ஈட்டுகிறது. உலக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லுவதில் 16ஆவது நாடாக உள்ளது. விவசாயம் பருத்தி உற்பத்தியில் அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே முதலிடத்தில் உள்ளது. அரிசி மற்றும் ஆலிவ் எண்ணெய் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள் ளது. அத்திப்பழம், பாதாம் பருப்பு, தக்காளி, தர்பூசணி உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் உள்ளது. புகையிலை உற்பத்தியில் நான்காம் இடத்தில் உள்ளது. அரசு முறை ஒருங்கிணைந்த நாடாளுமன்றக் குடியரசு நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், நாடாளுமன்ற சபாநாயகர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரிடம் அதிகாரம் குவிந்து காணப்படுகிறது. மார்ச் 25 _ கிரேக்க நாட்டின் சுதந்திர நாள். நாடாளுமன்றம் ஹெல்லிநிக் என்று அழைக்கப்படுகிறது. 13 மிகப்பெரிய நிர்வாகப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 325 நகராட்சிகள் மூலம் நகர மேலாண்மை நிர்வகிக்கப்படுகிறது. மின் உற்பத்தி நாட்டின் மொத்த மின் உற்பத்தி மூலங்கள்: 51.6% _ நிலக்கரி 12% _ நீர்மின் திட்டம் 20% _ இயற்கை எரிவாயு போக்குவரத்து நவீன மயமாக்கப்பட்ட சாலை மற்றும் இரயில்வே போக்குவரத்துகளைக் கொண்ட நாடு. அய்ரோப்பிய நாடுகளிலேயே மிக நீளமான கேபிள் பாலம் (Rio-Antirrio) இங்குள்ளது. இதன் நீளம் 2,250 மீட்டர். மிகவும் பரபரப்பான (ஏதென்ஸ், ஒலிம்பிக்) இரண்டு பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளன. தகவல் தொழில்நுட்பம் நவீன டிஜிட்டல் தகவல் தொடர்புகள் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் இணையம், தொலைபேசி 3ஜி, 4ஜி நெட்வொர்க் வைஃபை போன்ற வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் 30ஆம் நாடாகும். அறிவியல் தொழில்நுட்பம்
புதிய கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கென அதிகப்படியான நிதியை கிரேக்கம் ஒதுக்குகிறது. அய்ரோப்பிய விண்வெளி ஏஜென்சியில் உறுப்பு நாடாக உள்ளது. நகரங்கள் கிரேக்க நாட்டில் 3இல் 2 பங்கு மக்கள் நகர்ப்புரத்திலேயே வாழ்கின்றனர். அதிகப்பபடியான நகரங்களும் நகராட்சிகளும் உள்ள நாடு. ஏதென்ஸ், தீஸ்சிலோனிகா, பட்ராஸ், ஹீராக்லைன், லாரிஸ்சா, ஓலோங், லோன்னினா போன்றவை முக்கிய நகரங்களாகும். உணவு வால்நட், அல்மான்ட்ஸ், பூண்டு, ஆலிவ் எண்ணெய், புதினா, ரோஸ் ஒயின், கேண்டிபார், தேன், ஆக்டோபஸ், சிறிய ரக மீன்கள் போன்றவை கிரேக்க நாட்டு மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவுப் பொருள்களாகும். இம்மக்கள் எல்லா உணவுப் பொருள்களுக்கும் ஆலிவ் எண்ணெயையே பயன்படுத்துகின்றனர். இசை மற்றும் நடனம் இசையார்வம் உள்ள மாணவர்களுக்கு 6 வயது முதலே இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிரீஸ் நாட்டில் அந்தந்த பகுதிகளுக்கென்று தனித்தனியான கிராமியப் பாடல்கள் உள்ளன. 20ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க ஓப்ரா பாடகர் மரியா காலாஸ் கிரீஸ் நாட்டைச் சார்ந்தவர் ஆவார். கல்வி கல்வியில் வளர்ந்த நாடு. உலகின் தொன்மையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான தி யுனிவர்சிட்டி ஆப் கான்ஸ்டான்டி நோபில் உள்ள நாடு. சுகாதாரம் உலக அளவில் சுகாதாரத்தில் 14ஆம் இடத்தில் உள்ளது. குழந்தை பாதுகாப்பில் உலகின் 19ஆவது சிறந்த நாடு. 138 பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளும், அதிக அளவு மருத்துவர்களும் பணிபுரியும் நாடு. கிரேக்க மக்களின் சராசரி ஆயுட்காலம் 80.3. திரைப்படம் திரைப்படம் எடுக்கும் முயற்சி கிரீஸில் 1896இல் தொடங்கப்பட்டது. 1907இல் ஏதென்ஸ் நகரில் முதல் சினிமா அரங்கம் திறக்கப்பட்டது. 1950 காலகட்டம் கிரீஸ் சினிமா வரலாற்றில் பொற்காலமாகத் திகழ்ந்தது. 60 படங்களுக்கு மேல் அவ்வாண்டில் வெளியானது. விளையாட்டு கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஆண், பெண் வாட்டர் போலோ ஆகிய விளையாட்டுகள் பெரும்பான்மை மக்களால் விரும்பி விளையாடப்படுகின்றன. இவ்விளையாட்டுகளில் திறமையுள்ள வீரர்களைப் பெற்று வலிமையுள்ள அணியாக கிரீஸ் விளங்குகிறது. மேலும் சில தகவல்கள் தொன்மையான ஒலிம்பிக் மற்றும் நவீன ஒலிம்பிக் விளையாட்டுகள் உருவான நாடு. மைசீனியர்கள் (Mycenaean) உள்ளிட்ட இந்தோ-_யூரோ மக்கள் கி.மு.2000ஆம் ஆண்டளவில் கிரேக்கத்தில் குடியேறினர். கிரேக்க நாட்டின் காலநிலையானது, மத்திய தரைக்கடல் காலநிலையைச் சார்ந்ததாகும். தரைப்படை, கப்பற்படை, விமானப்படை என முப்படைகளையும் கொண்ட நாடு.
|