வேண்டும் நமக்கு பகுத்தறிவு
Print

y13.jpg - 854.42 Kb

ஒத்தத் தும்மல் அபசகுணம்
உருப்ப டாதே உன்பயணம்
புத்தி கெட்டோர் சொல்லிதுவாம்
பொருள்ப டுத்த வேண்டாமே!

பூனை குறுக்கே போனாலே
போகும் செயலும் முடியாதாம்
யானை குறுக்கே போனாலே
யாதாம் பயனும் சொல்வாரா?

விதவைப் பெண்ணை யெதிர்கொண்டு
வெளியே போனால் ஆகாதாம்
எதனால் எப்படி எனக்கேட்டால்
ஏற்கும் படியாய் பதிலுண்டோ?

பல்லிச் சத்தம் கேட்டாலே
பரவசக் கும்பிடு போட்டிடுவோர்
பல்லி விழுந்தால் பலன்காண
பதறி ஏடுகள் புரட்டுவதேன்?

எல்லாம் மூட நம்பிக்கை
ஏய்க்கும் பொய்மை வாடிக்கை
வெல்லும் அறிவு நல்லறிவு
வேண்டும் நமக்குப் பகுத்தறிவு!<

Share