தொடர் வண்டி ! | |||
|
குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி
நீண்டு வளைந்து பாம்பைப்போல் நீண்ட தண்ட வாளத்தில் வேண்டு மட்டும் மக்களுடன் வேகம் கூட்டிச் செல்கிறது
நேரம் மிகவும் சரியாக நேர்த்தி யாகச் சென்றிடலாம் காரைப் போலே ஆங்காங்கே நிற்காமல் நாம் சென்றிடலாம்
ஒன்றன் பின்னே ஒன்றாக உருண்டு ஓடும் சக்கரங்கள் அண்ணன் தம்பி போலத்தான் அணிஅணியாகச் சென்றிடுமே!
ரயிலில் பயணம் சென்றிடவே ராவும் கூட இனிதாகும். துயிலும் போதும் சுகமாக தூங்கிச் செல்ல இதமாகும்!
அக்கா தம்பி எல்லோரும் அழகாய் அதுபோல் வரிசையாய் கூ... கூ... கூ... கூ... என்றேதான் கூவி நாம்விளை யாடிடுவோம்!< * ரயில்வண்டி என்று வழக்கத்தில் ஆங்கிலச் சொல் கலந்து நாம் அழைக்கும் ‘TRAIN ’க்கு, தொடர்வண்டி என்பது சரியான தமிழ்ச் சொல்லாகும்.
|