செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை | |||
|
அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்குப் பாராட்டுகள்! தேவையான பொருட்கள்: 1. காகிதத் தட்டு_2 (ஒரு பக்கம் அலுமினியத்தாள் கொண்டது.) 2. கத்திரிக்கோல்_1 3. வண்ணங்கள் (கீணீtமீக்ஷீ சிஷீறீஷீuக்ஷீ) 4. அலுமினியம் / வெள்ளி வண்ண செல்லோ டேப். 5. பசை _ சிறிதளவு செய்முறை: 1. 1 முதல் 4 படங்களில் காட்டியுள்ளதுபோல் காகிதத் தட்டை மடித்துக்கொள்ள வேண்டும். 2. மற்றொரு காகிதத் தட்டில் கண்கள், கருவிழிகள், கால்கள், மூக்கு போன்ற பாகங்களை வரைந்து வெட்டிக்கொள்ள வேண்டும். 3. மூக்கு, கால் போன்ற பகுதிகளை செல்லோ டேப் கொண்டு ஒட்டிக் கொள்ளவும். 4. கண், கருவிழி பகுதிகளை பசை கொண்டு ஒட்டிவிட்டு, உடல், கால், மூக்கு, கருவிழி போன்ற பாகங்களுக்கு வண்ணம் தீட்டிவிடுங்கள். காகிதத் தட்டில் பறவை தயார்!<
|