Home 2018 ஆகஸ்ட் சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்
வியாழன், 02 பிப்ரவரி 2023
சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்
Print E-mail

 

s11.jpg - 364.96 Kb

மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது.

மறைமலைநகர் அரசு மேனிலைப்பள்ளி, ஜே.ஆர்.கே. குளோபல் பள்ளி, புனித ஜோசப் மேனிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து 100 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். அப் போட்டியில் பரிசுபெற்ற மாணவர்கள் எழுதிய கட்டுரைகளிலிருந்து சில துளிகள்...

எஸ்.சர்மிளா, 11ஆம் வகுப்பு

“பசிக்கிற வயிறுக்கு நம் கைதான் உணவு ஊட்ட வேண்டும்’’ என்பதுபோல தங்கள் போராட்டத்துக்கு தாங்கள்தான் தீர்வு காண வேண்டும். அதனால், பெரியார் பெண் விடுதலைக்குப் பெண்களை ஊக்குவித்து அவர்களை முன்னிறுத்தி விடுதலையைப் பெறச் செய்தார்.

ஜனனி, 8ஆம் வகுப்பு

உலக நாகரிகத்திற்கு முன்னுதாரணமான நம் சிறப்புமிகு இந்தியாவில்தான், மற்ற தேசங்களில் காணமுடியாத அநாகரீகமும் காணப்படுகிறது. சாதிப் பிரிவினை, தீண்டாமை என்ற பெயரில் மக்களில் ஒரு பகுதியினரை நசுக்கிய கொடுமைதான் அது. தங்களது சுயமரியாதையை இழந்து இதுதான் தங்கள் விதி என்று வாழ்ந்த மக்களிடம், ‘இது விதியல்ல! ஆதிக்க வர்க்கத்தின் சதி!’ என்று துணிந்து சொன்னார் ஒருவர்.

கரிய இருளைப் போக்கி, வெளிச்சத்தை உண்டாக்கும் கதிரவனைப் போன்று ‘பகுத்தறிவுப் பகலவன்’ என்று அனைவராலும் அழைக்கப்படும் தந்தை பெரியாரே அவர்.

எல்லா மக்களும் எல்லா உரிமைகளும் பெற்று இன்று மகிழ்ச்சியாகத் தங்கள் சுதந்திரக் குரலை வெளிப்படுத்துவதற்கு ஏணியாக இருந்தவரே பெரியார் அவர்கள்தான். அவரது சிந்தனைகள் திட்பநுட்பமானவை.

எஸ். குணப்பிரியா, ஏழாம் வகுப்பு

தாலியை அடிமைச் சின்னமாகக் கருதிய பெரியார், “திருமணம் ஆனவர், ஆகாதவர் என்ற வேறுபாட்டை பெண்களுக்கு தாலி எடுத்துக் காட்டுவதுபோல் ஆண்களுக்கு உள்ள அடையாளம் என்ன? கற்புக்கரசி போல் ‘கற்புக்கரசன்’ என்ற வார்த்தை ஏன் இல்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

“கன்னிகா தானம் என்பதற்கு கன்னியைத் தானமாக கொடுத்து விடுவது என்று பொருள். தாரா முகூர்த்தம் என்றால் பெண்ணை தாரை வார்த்து தானமாகக் கொடுப்பது’’ என்று கூறிய பெரியார், ‘வாழ்க்கை ஒப்பந்த விழா’, ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்று பெண்களின் மரியாதைக்கு முக்கியத்துவம் தரும் சுயமரியாதை வார்த்தைகளைக் கொண்டு வந்தார்.

சர்மிளா, 12ஆம் வகுப்பு

மக்கள் படும் துன்பங்களைக் கண்டு சிறுத்தை போல் சீறி எழுந்தார் பெரியார். மக்களுக்காக தன் வாழ்வினை அர்ப்பணித்தார்.

இரண்டாயிரம் ஆண்டு-களாக அடிமைத்தனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பெண்களை, அடிமைத்தனத்தில் இருந்து மீட்டார் பெரியார்.

எஸ்.கனிமொழி, 11ஆம் வகுப்பு

பெண்கள் படித்து, பல துறைகளில் வேலை பார்க்க வேண்டும் என்று போராடினார் பெரியார். இன்று பெண்களே ஆண்களைவிட சாதனைகள் செய்து வருகின்றனர். இத்தனை வளர்ச்சிக்கும் பெரியாரே காரணம்.

கு.கவின்சூரியன், 9ஆம் வகுப்பு

1951ஆம் ஆண்டில் மிகவும் குறைவாக இருந்த கல்வி நிலை, இப்போது பெரிதும் வளர்த்துள்ளது. இதற்குக் காரணம் சமூகநீதி.

கு.ஜலஸ்ருதி, 11ஆம் வகுப்பு

“நாட்டின் பெருங்கேடுகளில் ஒன்று குழந்தைத் திருமணம். குழந்தைகளின் திறமைகளை வெளியே கொண்டு வராமல் அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் ஆயுதம்தான் குழந்தைத் திருமணம்” என்று பெரியார் எதிர்த்தார்.

 

மறைமலைநகரில் பெரியார் பிறந்தநாள் - கட்டுரைப் போட்டி - பரிசளிப்பு விழா!

14.7.2018 அன்று ஜே.ஆர்.கே. குளோபல் பள்ளி அரங்கில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு.பூ.ஆ.நரேஷ்   பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அரசு மேனிலைப்பள்ளி, புனித ஜோசப் பள்ளி, ஜே.ஆர்.கே. குளோபல் பள்ளி  முதல்வர்கள், புழல் ராஜேந்திரன்,  பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து-கொண்டனர்.
‘பெரியார்’ பற்றியும், ‘சமூகநீதி’ குறித்தும் ஆவணப் படங்கள் விழாவில் திரையிடப்பட்டன.

Share