அவர் வழி செல்வோம்! | |||
|
சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான்
விந்தை யானது அவர்பேச்சு வேடிக்கை காட்டும் உரைவீச்சு மந்தை மேயும் மாடல்ல மானம் மிக்கார் மனிதரென்றார்!
கைத்தடி தான்அவர் அடையாளம் கருத்தும் நடையும் மிகஆழம் நைந்த மானுடன் மூடத்தை நையப் புடைக்கும் அவர்வாதம்
பொய்யிலை கடவுள் மறுத்தார்தான் புரியா மனிதரை வெறுத்தார்தான் தையலை உயர்த்த வகைசெய்தார் தரணியில் பெரியார் பெரியார்தான்!
தலைமுறை சிறக்கும் பின்சென்றால் தமிழகம் வெல்லும் அவர்தொண்டால் நிலைபெற் றேதான் நாம்வாழ நித்தமும் அவர்வழி செல்வோமே! அருப்புக்கோட்டை செல்வம்
|