Home 2018 அக்டோபர் 2018 'மொக்கை`யும் மூன்றெழுத்து!
செவ்வாய், 20 நவம்பர் 2018
'மொக்கை`யும் மூன்றெழுத்து!
Print E-mail

"அம்மா"  மூன்று எழுத்து

"அப்பா" மூன்று எழுத்து

"தம்பி" மூன்று எழுத்து

"தங்கை" மூன்று எழுத்து

"மகள்" மூன்று எழுத்து

"மகன்" மூன்று எழுத்து

"காதலி" மூன்று எழுத்து

"மனைவி" மூன்று எழுத்து

"தாத்தா" மூன்று எழுத்து

"பாட்டி" மூன்று எழுத்து

"பேரன்" மூன்று எழுத்து

"பேத்தி" மூன்று எழுத்து

அனைத்தும் அடங்கிய "உறவு" மூன்று எழுத்து

உறவில் மேம்படும் "பாசம்" மூன்று எழுத்து

பாசத்தில் விளையும் "அன்பு" மூன்று எழுத்து

அன்பில் வழியும் "காதல்" மூன்று எழுத்து

காதலில் வரும் "வெற்றி"யும் மூன்று எழுத்து; "தோல்வி"யும் மூன்று எழுத்து

"காதல்" தரும் வலியால் இது நான் எழுதிய "கவிதை" என்றால் அதுவும் மூன்று எழுத்து

இது "அருமை" என்றால் அதுவும் மூன்று எழுத்து

"மொக்கை" என்றால் அதுவும் மூன்று எழுத்து

கருத்து எப்படி வருமோ என்ற "கவலை"யும் மூன்று எழுத்து

"நட்பு" மூன்று எழுத்தில் இணைந்த படித்த அனைவருக்கும் நன்றி என்பதும் மூன்று எழுத்து

"மூன்று"ம் மூன்று எழுத்து

இவை அனைத்தும் அடங்கிய "தமிழ்" மூன்று எழுத்து

"வாழ்க தமிழ்"

- மு.அர்ஷத், அ.ரையான்,

எட்டாம் வகுப்பு அ பிரிவு

Share