இளையோர் இனியும் தூங்கலாமா? | |||
|
சிறுவர் பாடல் வண்ணம் தீட்டுங்கள் விடை மனித உரிமை பறித்திட் டார்கள் மனதில் வேலைப் பாய்ச்சி னார்கள் குனியக் குனிய குட்டுகி றார்கள் குனிந்த வன்மேல் ஏறுகி றார்கள்; இனியும் இதனை பொறுக்க லாமா இளையோர் இன்னும் தூங்க லாமா தனிமை நமக்கு துன்ப மாகும் துணைகொண் டெழுந்து போரிட வேண்டும்!
நமது உரிமை இழக்க லாமா நாளும் இனியிது நடக்க லாமா நமது வாழ்வைத் தொலைக்க லாமா நொந்து துயரில் வாட லாமா; சுமக்கும் சுமைகள் பார மென்றால் சுகத்தைக் காண முடியா தய்யா நமக்குள் எழுச்சி பெருக வேண்டும் நாளும் இதனை நினைக்க வேண்டும்!
எதையும் தாங்கும் இதய மிருந்தால் எதிர்கா லம்நம் பேரைச் சொல்லும் வதைபடத் தானா வாழ்வது இங்கு விடைகொடு மனிதா துயர்களுக் கின்று; பதைப்பு நமக்குள் தோன்றா வண்ணம் பொங்கி யெழுந்து புரட்சிகள் செய்வோம் சிதையில் எரிந்து போகும் முன்னே சிகரம் தொட்டு சாதனை செய்வோம்! நல்லாசிரியர் கே.வி.ஜெனார்தனன், காஞ்சிபுரம்
|