சனி, 16 அக்டோபர் 2021
பெரு(PERU)
Print E-mail

அமைவிடமும் எல்லைகளும்:

பெரு தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலுள்ள நாடு.

தற்போது அதிகாரப்பூர்வமாக பெரு குடியரசு என்று அழைக்கப்படுகிறது.

தென்அமெரிக்காவின் மூன்றாவது மிகப் பெரிய நாடு.

வடக்கில் ஈக்வடார், கொலம்பியா நாடுகளும், தெற்கில் சிலி மற்றும் பொலிவியா நாடுகளும், தென்கிழக்கே பசிபிக் பெருங்கடலும் அமையப் பெற்றுள்ளன.

தலைநகரம் லிமா ஆகும்.

புவியியல் அமைப்பு:


பெருவின் புவியியல் அமைப்பு மேற்கிலிருந்து கிழக்காக மூன்று பெரும் பிரிவாய் உள்ளது.

(I)  நீண்ட, அகலம் குறைந்த தாழ்வுப் பாலைவனப் பிரதேசங்களைக் கொண்ட கடற்கரைப் பகுதி.

(II)  ஆண்டெஸ் மலையின் உயர்நிலங்கள்.

(III)  அமேசான் ஆற்றுப் படுகையிலுள்ள பரந்த காடுகளைக் கொண்ட கிழக்கு மலையடிவாரம்.

60% பரப்பளவு காடுகள் சூழ்ந்துள்ளன.

உலகில் உள்ள 32 வகையான வானிலைச் சூழல் வகைகளில் 28 சூழல்களை இங்கு காணலாம்.

மொழியும் மக்களும்:

மக்கள் பெருவியர் என அழைக்கப்படுவர்.

மக்கள் தொகை 28,674,757 மில்லியன், உலக மக்கள் தொகை வரிசையில் 41ஆவது இடம்.

ரோமன் கத்தோலிக்க மதம் அதிகாரபூர்வமானது.

பெரும்பாலானோர் பேசும் மொழி எசுப்பானிய மொழி. (Spanish)

மலைப்பகுதிகளில் கெச்சுவா மொழி பேசும் பழங்குடி மக்கள் உள்ளனர்.

அமேசான் காடுகளில் அய்மாரா மொழியும் பேசுகின்றனர்.

பல்வேறு இன மக்கள் கூடி வாழ்வதால் இசை, இலக்கியம், நடனம் போன்ற கலைகளில் சிறந்து விளங்குகின்றனர்.

அரசு முறை:


மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர் ஆட்சி முறை.

பெரு நாடு 25 ஆட்சிப் பகுதிகளையும் லிமா ஒன்றியத்தையும் உட்படுத்திய ஆட்சி.

குடியரசுத் தலைவருக்கே உயர்ந்த அதிகாரம்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ஆலன் கார்சியா பெரேசு.

பெரு நாட்டில் குடியரசுத் தலைவருக்குக் கீழே தலைமை அமைச்சர்களின் பணி இருக்கும்.

அய்.நா.சபையின் உறுப்பு நாடாக உள்ளது.

பொருளாதாரம்:

நாணயம் நூவோ சோல்.

கலப்புப் பொருளாதாரத்தை அடிப்படையாய் கொண்டது.

விவசாயம், மீன் பிடித்தல், நிலத்தடி கனிமவளம் எடுத்தல் மற்றும் ஆடை உற்பத்தி ஆகியவை முதன்மைத் தொழில்கள்.

1990களில் பல தொழில்கள் தனியார்மயம் ஆக்கப்பட்டன.

வரலாறு:


பெரு 1230 வாக்கில் கஸ்கோவைத் தலைநகராகக் கொண்டு நிறுவப்பட்ட இன்கா பேரரசின் மய்யமாகும்.

1533இல் பிஸாரோ தலைமையிலான ஸ்பானிஷ் போர்வீரர்கள் போரிட்டுக் கைப்பற்றினர்.

அதன் பின் ஸ்பெயின் அரசாங்கப் பிரதிநிதி மூலம் பெருவை ஆண்டது.

ஜோஸ் டெசான் மார்ட்டின் மற்றும் பொலிவார் ஆகியோரது இராணுவப் போராட்டங்களுக்குப் பின்னரே பெருவிற்குச் சுதந்திரம் கிடைத்தது.

1821இல்தான் ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது.

பெரு என்னும் பெயர் பிரு (Biru) என்னும் பெயரிலிருந்து உருவானதாகும். இது பனாமா, சான் மிகுயேல் வளைகுடாவிற்கருகே 16ஆம் நூற்றாண்டில் வசித்து வந்த மன்னர் ஒருவரின் பெயராகும்.

புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்கள்:


மாச்சு பிச்சு என்னும் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற பழைய நகரம்.

மாச்சு என்றால் பழைய, பிச்சு என்றால் உச்சி எனப் பொருள்.

மாச்சு பிச்சுவை யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய இடமாக 1983இல் அறிவித்துள்ளது.

2007ஆம் ஆண்டு புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் மாச்சு பிச்சு அறிவிக்கப்பட்டது.

நசுகா கோடுகள் என்பது மனிதர்கள் வாழாத இடமான நிலப்பரப்பில் நேர்த்தியாக வரையப் பட்டிருக்கும் சித்திரங்களும், கோடுகளும் ஆகும். இதுவும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.

அமேசான் காடுகளும், பனி சூழ்ந்த உயர் ஆண்டீய மலைகளும் பிற சுற்றுலாத் தளங்களாகும்.

உணவு:

மசித்த உருளைக்கிழங்கு, சிப்ஸ் உணவுகள் பெருவின் பிறப்பிடம்.

வெள்ளை எலியின் கறி அனைவருக்கும் பிடித்த உணவு.

சுவையான தகவல்:

ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மாச்சு _ பிச்சுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

மாச்சு பிச்சுவில் சூரியனுக்கு கோவில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

உலகிலேயே மிகப் பெரும் ஆறாகிய அமேசான் ஆறு பாய்கின்றது.

60% பரப்பளவு சூழ்ந்துள்ள காடுகளில் 6% பழங்குடி மக்கள் மட்டுமே வாழ்கின்றனர்.

2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் தகுதிபெற்று அனைவரையும் வியப்புறச் செய்தது.

தென் அமெரிக்க பகுதியிலிருந்து தகுதி பெற்ற புதிய அணியாகவும் பார்க்கப்பட்டது.

பெரு நாட்டின் பாரம்பரிய இசையான கஜோன் இசைக்கருவி வாசிக்-கும் போட்டி கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

கஞ்சாவை (மேரிவானா) மருந்தாகப் பயன்படுத்த பெரு நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.

கஞ்சா (மேரிவானா) நேரடியாக அல்லாமல், எண்ணெய் திரவமாக மாற்றி நோயுற்ற குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுகிறது.

உலகில் உள்ள அறியத்தக்க 117 வகையான நில_உயிரின செடி கொடிகளில் 84 வகையான செடிகொடிகள் இங்கு காணப்படுகின்றன.

மாச்சு பிச்சுவில் இன்கா நாகரிகத்தின் எச்சங்கள் காணப்படுகின்றன.

அமேசான் என்னும் வார்த்தை இப்பொழுது நாம் அதிகம் கேட்கும் வார்த்தையாகிவுள்ளது. அது பெரு நாட்டின் காட்டையும், ஆற்றையும் ஒரு வகையில் குறிக்கும்.

Share